உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயது வரம்பை உயர்த்தாமல் பி.சி., பிரிவினருக்கு துரோகம்

வயது வரம்பை உயர்த்தாமல் பி.சி., பிரிவினருக்கு துரோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'ஊரக வளர்ச்சி உதவியாளர் பணிகளுக்கு, வயது வரம்பை உயர்த்தாமல், பிற்படுத்தப்பட்டோருக்கு தி.மு.க., அரசு துரோகம் செய்கிறது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாக காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஜீப் ஓட்டுநர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களை, மாவட்ட அளவில் நிரப்பிக் கொள்ளலாம் என, அனைத்து கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை அறிவுறுத்தி உள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆள் தேர்வு நடப்பதால், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான வயது வரம்பு, 35-ல் இருந்து 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இது சரியான நடவடிக்கை. இதேபோல், பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 37 ஆகவும், பி.சி., - எம்.பி.சி., வகுப்பினருக்கான வயது வரம்பை 39 ஆகவும் உயர்த்தி இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அதை செய்யவில்லை. இது சமூக அநீதி.அரசின் தவறுக்காக, அரசு வேலை தேடும் அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது. எத்தனை ஆண்டுகள் பணி நியமனம் நடக்கவில்லையோ, அத்தனை ஆண்டுகள் வயது வரம்பு விலக்கு அளிப்பது தான் இயற்கை நீதி.அவ்வாறு செய்ய மறுப்பது, வேலை தேடும் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். அந்த துரோகத்தை தான் தி.மு.க., அரசு செய்து கொண்டிருக்கிறது. ஊரக வளர்ச்சி இயக்ககத்தின் கீழ் காலிப் பணியிடங்களுக்கு, பி.சி., - எம்.பி.சி., பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

angbu ganesh
மே 24, 2025 15:46

இதே mla mp cm இதுக்கெல்லாம் ஒரு வயசு நிர்ணயம் பண்ணனும் குறிப்பிட்ட வயசுக்கு மேல அவனுங்கள வீட்டுக்கு அனுப்பனும், அரசாங்க வேலைக்கு மட்டும் வயசு வரம்பா ஏன் தகுதி பார்த்து வேலைகள் தரலாமே இப்படி SC, ST, BC OC ன்னு பிரிக்காம மெரிட்ல அந்தந்த வேலைக்கு பொருத்தமான திறமையான ஆட்களை நியமிக்கலாம் 50 வயசு வரைக்கும் அப்படி பண்ணாம ஜாதி மத வாரிய வேலை கொடுக்கறதாலதான் இப்படி லஞ்சம் தல விரிச்சு ஆடுது


sundarsvpr
மே 24, 2025 15:31

திறமை இன்மை வயதை வைத்து நிச்சியக்கமுடியாது. பணி நியமனத்திற்கு மட்டும் வகுப்பு வயது பார்ப்பது சரியில்லை. அரசு அதிகாரிகளுக்கு வயது வரம்பு உண்டு. ஆனால் அரசியல்வாதிகளுக்கு ஏன் கடைப்பிடுப்பதில்லை. அமைச்சர்கள் ஐம்பது வயதிற்கு குறைவாக இல்லையே ஏன்? பொதுமக்கள் வரும் தேர்தல்களில் வயதை பார்த்து தேர்ந்துஎடுங்கள். இளம் ரத்தங்களை தேர்ந்துஎடுங்கள்.


rama adhavan
மே 24, 2025 10:16

இட ஒதுக்கீட்டில் பணி கிடைத்தாலும் அவர்களிலும் திறமை உள்ளவர்களைதான் நல்ல வேலை தருவார்கள். மற்றவர் டம்மி போஸ்டிங்தான். இது எல்லாருக்கும் தெரியும். எல்லா ஐ ஏ எஸ் அதிகாரிகளும் நிதி துறை, உள் துறை செயலர்கள் ஆவது இல்லையே. அதுவும் நேரடி ஐ ஏ எஸ் மட்டுமே இத் துறைக்கு போடுவார்கள்.


அப்பாவி
மே 24, 2025 08:56

ஏன் அப்பாவுக்கு இன்னும் அரசு வேலை கிடைக்கலியா? எப்போ பதிஞ்சாரு?


Murugan Gurusamy
மே 24, 2025 08:27

ஒன்றிய அரசின் தமிழர் விரோத போக்கை இவர் கேட்டு பார்க்கட்டுமே, அப்போ தெரியும்


Kasimani Baskaran
மே 24, 2025 07:36

அந்த வயதுக்குள் ஆள் கிடைக்கவில்லை என்றால் வேறு என்ன செய்ய முடியும் - முதியோர் வந்தாலும் இட ஒதுக்கீட்டு விதிகளுக்கு தகுந்தது போல இடம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். 50% தகுதியின் அடிப்படையில் நியமித்தால் உருப்படும்.


D Natarajan
மே 24, 2025 07:25

எதற்கு வயது வரம்பு. 58 வயது வரை எல்லோரையும் வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம்


naranam
மே 24, 2025 07:16

எப்போ பார்த்தாலும் இதே ஒப்பாரி தான் இவர்களுக்கு!


RaKa
மே 24, 2025 06:58

தமிழக அரசிடம் எதிர் பார்ப்பது என்பது செவிடன் காதில் ஊதிய சங்கின் நிலை தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை