உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசடி நபர்களிடம் உஷாராக இருங்க! இ - மெயில் அனுப்பும் ஐ.ஆர்.சி.டி.சி.,

மோசடி நபர்களிடம் உஷாராக இருங்க! இ - மெயில் அனுப்பும் ஐ.ஆர்.சி.டி.சி.,

சென்னை : 'சமூக வலைதளங்களில், மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள்' என, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், அதன் உபயோகிப்பாளர்களுக்கு, 'இ - மெயில்' அனுப்பப்பட்டு வருகிறது.ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது: ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட வசதிகளை பெற, 9 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். தினமும், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. www.irctc.co.in என்ற இணையதளம் மற்றும், 'கூகுள் பிளே ஸ்டோரில், irctc rail connect app' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேவைகளை பெறலாம். இந்தச் செயலியை நிறுவுவதற்கு, எஸ்.எம்.எஸ்., அல்லது, 'வாட்ஸாப்' தகவல்கள் கேட்கப்படாது.ஆனால், ஐ.ஆர்.சி.டி.சி., பெயரில், ஓரிரு எழுத்துக்களை மாற்றிக்கொண்டு, சிலர் வாட்ஸாப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக, போலியாக எஸ்.எம்.எஸ்., 'லிங்க்' அனுப்பி வருகின்றனர். சிலர், 'வாய்ஸ் கால்' அழைப்பிலும் பேசுவதாக புகார்கள் வருகின்றன. எனவே, ஐ.ஆர்.சி.டி.சி., உபயோகிப்பாளர்கள், இதுபோன்ற இணைப்புகளை, 'க்ளிக்' செய்ய வேண்டாம். இந்த லிங்க் பயன்படுத்தினால், முறைகேடு நடக்க வாய்ப்புகள் உள்ளன. உங்களை தொடர்பு கொண்டு வங்கி அட்டை எண், பாஸ்வேர்டு உள்ளிட்டவை குறித்து விபரங்கள் கேட்டால் தெரிவிக்க வேண்டாம். இதுகுறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து, ஐ.ஆர்.சி.டி.சி., உபயோகிப்பாளர்களுக்கும், 'இ - மெயில்' வாயிலாக தகவல் அனுப்பி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M. PALANIAPPAN, KERALA
ஏப் 09, 2025 10:52

நான் பல வருடங்களாக ஐ ஆர் சி டி சி யில் முன் பதிவு செய்து யாத்திரை செய்து வருகிறேன் , சில சமயங்களில் டிக்கெட் கேன்சல் செய்தும் இருக்கிறேன், அதில் ரி-பண்ட் மாக்ஸிமம் 2 தினங்களில் அக்கௌன்ட்ல் கிரெடிட் ஆகியும் உள்ளது. உலகிலேயே மிக பெரிய நெட் ஒர்க் ஐ ஆர் சி டி சி, இவ்வளவு கரெக்ட் ஆக நடை பெறுவதை பாராட்ட வேண்டும்


Barakat Ali
ஏப் 09, 2025 10:40

Refund இல் ஏமாற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., ஐ விட மோசடி நபரோ, கூட்டமோ இருக்க முடியுமா ????


Thetamilan
ஏப் 09, 2025 09:50

மத்திய அரசும் அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் கார்போரேட்டுகளும் மிக பெரிய மோசடி பேர்வழிகள் . மற்றவை அப்புறம் , மிக சிறியது


V Venkatachalam
ஏப் 09, 2025 13:44

கட்டுமரம் கரூணாவை விட உலகின் முன்னோடி மோசடிக் காரர் யாராவது இருக்கிறார்களா?


V Venkatachalam
ஏப் 09, 2025 18:27

மத்திய அரசு அங்கீகாரம் பெறாத பெரிய கார்ப்பரேட் எது தெரியுமா? இந்த திருட்டு தீயமுக தான்.. முரசொலி படிக்கிறவன்கள் மட்டுமே அவன்களுக்கு முட்டு கொடுப்பான்கள்..


முக்கிய வீடியோ