பைக்-கார் மோதல்; இருவர் பலி
ராமநாதபுரம்: பரமக்குடி இலந்தைகுளத்தில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மலைராஜ் 55, பூவேந்திரன் 70. இவர்கள் இருவரும் ஒரே டூவீலரில் வெங்காளூரில் இருந்து பரமக்குடி நோக்கி கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tpmcjfma&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது இலந்தைகுளம் அருகே மதுரை, ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையின் குறுக்கே ரோட்டை கடந்தனர். இந்நிலையில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற காரை ராஜா 45/25 என்பவர் ஒட்டி வந்தார். தொடர்ந்து பைக் மீது கார் மோதியதில் தொழிலாளர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.இதனால் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.