உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11ம் வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு ரத்து; இந்தாண்டு முதலே அமல்!

11ம் வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு ரத்து; இந்தாண்டு முதலே அமல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இந்தாண்டு முதல் ரத்து செய்யப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசின் சார்பில், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, இன்று (ஆகஸ்ட் 08) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

பாராட்டு விழா

எக்காரணம் கொண்டும் யாரும் கல்வியை பாதியில் கைவிடக்கூடாது. அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் . பள்ளிக் கல்வி வரலாற்றில் இது சிறப்பு விழா. எந்த மாநிலத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படுவதில்லை. இந்த வயதில் என்ஜாயும் பண்ணலாம்; நன்றாக படித்து சாதிக்கவும் செய்யலாம்.

புது எனர்ஜி

பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் பார்த்தால் புது எனர்ஜி வந்து விடுகிறது. இந்த ஆண்டு 75% மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் இது 100 சதவீதமாக உயர வேண்டும். அந்த இலக்கை எட்ட உங்களை போல மாணவர்கள் தான் உதவ வேண்டும். நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு போகும் மாணவர்கள் அச்சப்படாதீர்கள்.

ஜெயித்து வாருங்கள்

காடு எதுவாக இருந்தாலும், சிங்கம் தான் அங்கு ராஜா. அதுமாதிரி எளிய பின்னணியில் இருந்து முயற்சியால் பெரிய உயரத்திற்கு வந்திருக்கும் நீங்கள் தான் ரியல் ஹீரோ. உங்கள் கெத்தை காண்பித்து ஜெயித்து வாருங்கள். உங்களை தூக்கி வைத்து கொண்டாட நாங்களும், இந்த உலகமும் தயாராக இருக்கிறோம்.

தனி சிந்தனை

தமிழகத்திற்கு என்று தனி சிந்தனை உள்ளது சிந்தித்து செயல்படும் வகையில் கல்வி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கை மூலமாக படித்து மனப்பாடம் செய்யும் மாணவர்களை உருவாக்குவதை விட, சிந்தித்து கேள்வி கேட்கும் மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்.படிக்கிறவர்களாக மட்டும் அல்ல; படைப்பாற்றல் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்.

இருமொழிக் கொள்கை

கல்வி உடன் உடல்பயிற்சியும் இணைக்கப்படும். தாய்மொழி தமிழ் நமது அடையாளமாக, பெருமிதமாக இருக்க வேண்டும். முக்கியமாக தமிழும், ஆங்கிலமும் எங்களது இருமொழிக் கொள்ளை தான் உறுதியான கொள்கையாக இருக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன், இருமொழிக் கொள்கை தான், நம்முடையான உறுதியான கொள்கை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். புதிய கல்விக்கொள்கையின்படி, 11ம் வகுப்புக்கான அரசு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. நடப்பாண்டு முதலே இது அமலுக்கு வர உள்ளது. எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சியும் தொடரும். இனி மேல் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு மட்டுமே அரசு தேர்வு நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

S.V.Srinivasan
ஆக 14, 2025 09:02

இன்னும் இருக்கும் 8 மாதத்திற்குள் தமிழக மாணவர்களை படிக்க விடாமல் எந்த அளவு எங்களால், கெடுத்து குட்டிசுவர் ஆக்க முடியுமோ, அத்தனையும் செய்து விட்டுத்தான் ஆட்சியிலிருந்து இறங்குவோம். கலைஞர் மீது சத்யம்.


Hemambika Rajagopalan
ஆக 08, 2025 22:37

2018 அரசு மாநில பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து, 11ஆம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் வைத்து, மதிப்பென் 12ம் வகுப்பு மதிப்பெண்ணோடு சேர்க்கப் படும் என்று சொல்லி பிறகு ரத்து செய்தார்கள்.11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு புத்தாக்கம் ஒவ்வொரு 6 மாதம் முடிந்து கொடுத்தார்கள். புது பாடத்திட்டம் எந்த வித முன் பயிற்சி இல்லாததால், வழிகாட்டுதலில் மிகுந்த குறை அனுபவப்பட்டது வாத்தியார்களிடம். மாணவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். எப்பொழுதும் ஒரு பாடத்திட்டம் மாற்றும்பொழுது 6ம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். திடீரென்று 10, 11ம் வகுப்பில் மாற்றம் செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பெரிதாக பாதிக்கப்படும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தேவையில்லாமல் பாடத்திட்டத்தை மாற்றுவது, படங்களை கூட்டுவது, குறைப்பது, தேர்வு மாதிரியை திடீரென்று மாற்றுவது மாணவர்களுக்கு குழப்பதையும் ஆர்வத்தையும் குறைக்கும் . மற்படி மத்திய பாடத்திட்டம் போல் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து திடீர் முடிவாக கொண்டு வந்து 2018- 2020 11, 12ம் வகுப்பு மாணவர்கள் சொல்லமுடியா துயரப்பட்டார்கள். அந்த வருட மதிப்பெண் ஆராய்ந்து பார்த்தால் வேதனை தெரியும். நன்றாக படிக்கும் மாணவர்களால் கூட சரியாக மதிப்பெண் எடுக்க முடியவில்லை.


தாமரை மலர்கிறது
ஆக 08, 2025 20:34

வருங்கால ஓட்டுரிமை உள்ள மாணவர்களை படித்து தேர்வு எழுத சொன்னால், பிடிக்காது. அதனால் படிக்க வேண்டாம். தேர்வை எழுத வேண்டாம். கோட்டாவில் அரசு வேலை கிடைக்கும். முட்டாள்களை உருவாக்கி ஊழலை பெருக்கும் திருட்டு திராவிட சோம்பேறி மாடல்.


சசி
ஆக 08, 2025 17:49

இதுவும் அரசியல்


vivek
ஆக 08, 2025 17:35

.... கும்மிடிப்பூண்டி தாண்டுன ஹிந்தி மட்டுமே உதவும் ...மற்ற மொழிகள் உதவாது முழுசிக்கோ


Karthik Madeshwaran
ஆக 08, 2025 15:49

தமிழ்நாடு முதல்வர் வார்த்தைகள் சிறப்பு. அரசு பள்ளியில் இருமொழி கொள்கை போதும். இடைநிற்றல் இல்லாமல் மாணவர்களை பள்ளிக்கு வர செய்வதே உயர்ந்த நோக்கம். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில், இந்த வருடம் 75% மாணவர்கள் மேல் கல்லூரியில் சேர்ந்து இருப்பது உண்மையிலயே ஒரு சாதனை. இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் கல்வி, மருத்துவம், தொழில் போன்ற துறைகளில் முன்னோடி தான். மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. மாநில கல்வி கொள்கை பற்றி பாஜக கொத்தடிமைகள் தங்கள் இஷ்டத்துக்கு சேற்றை வாரி இறைப்பார்கள், சூரியனை பார்த்து நாய் குறைத்தால் என்னவாகி விட போகிறது. Let them bark.


vivek
ஆக 08, 2025 17:36

ஏல நீ கும்மிடிப்பூண்டி தாண்டி போயி இருக்கியா...கடைசி வரை உனக்கு அலுமினிய தட்டு தான்


vivek
ஆக 08, 2025 17:38

பாவம் தமிழ் தேர்வில் எத்தனை மாணவ மாணவிகள் தோற்றார்கள் என்று கொத்தடிமைக்கு தெரிய வாய்பில்லை....barking dogs don't bite


vivek
ஆக 08, 2025 17:41

barking will not bite...they will be only lifetime slaves...hope you understand


Rajarajan
ஆக 08, 2025 15:36

ஆமாம், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதி கஷ்டம். எனவே 11ம் வகுப்பு தேர்வு வேண்டாம். நல்ல கருத்து. எனவே, பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்பில், கடைசி வருடம் மட்டும் தேர்வு வைக்கலாம். முதல் மற்றும் இரண்டாம் வருடங்களில், தேர்வே வேண்டாம்.


Kjp
ஆக 08, 2025 15:28

சபாஷ் முதல்வரே. இனிமேல் தமிழ்நாடு கல்வியில் விளங்கிடும். ஓட்டுக்காக எதையும் செய்வார் இந்த முதல்வர். முதல்வர் குடும்பம் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் குறிப்பாக சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி படிக்கிறார்கள் மாணவர்கள். ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இந்தி படிக்கக் கூடாதாம்.


vbs manian
ஆக 08, 2025 15:19

அகில இந்திய தேர்வுகளில் தமிழகத்தை விட மற்ற மாநில மாணவர் ஜொலிக்கிறார்கள். வசதி உள்ளவர்கள் வெளிமாநிலங்களில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கலாம். அமெரிக்கா கம்பெனிகளில் பணி புரியும் இந்தியர்களின் பின்னணி ஆராய்ந்து பாருங்கள்.


vbs manian
ஆக 08, 2025 15:09

அமைச்சர்களின் கல்வி தகுதி வெளியிட்டால் நாட்டுக்கு நல்லது. மாணவருக்கும் உற்சாகம் வரும்.


புதிய வீடியோ