உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறும் விளம்பர ஆட்சி, வாடகைக்கு ஆள் பிடித்து புகழ்பாடும் தி.மு.க. அரசு; அண்ணாமலை குற்றச்சாட்டு

வெறும் விளம்பர ஆட்சி, வாடகைக்கு ஆள் பிடித்து புகழ்பாடும் தி.மு.க. அரசு; அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: வெறும் விளம்பர ஆட்சியாகவும், வாடகைக்கு ஆட்களைப் பிடித்து புகழ் பாடச் சொல்வதாக தி.மு.க., அரசு மீது தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராம ஊராட்சியில், சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். இரண்டு பக்கமும் பவானி ஆற்றால் சூழப்பட்ட இந்த கிராமத்தில், பள்ளி மாணவ, மாணவியர், அருகில் உள்ள நகரங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும், பரிசலில், பவானி ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. வெள்ளப் பெருக்கு காலங்களில், பரிசல் போக்குவரத்து தடைபடுவதால், சுமார் 8 கி.மீ தொலைவுக்குச் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது.குறிப்பாக, அவசர மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள், இதனால் குறித்த நேரத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாமல், உயிரிழப்புகள் பல ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பவானி ஆற்றைக் கடந்து செல்ல, உயர்மட்டப் பாலம் அமைத்துத் தரக் கோரி, பல ஆண்டுகளாக அம்மாபாளைய கிராமப் பொதுமக்கள், முதல்வரிடமும், அந்தியூர் திமுக எம், நேரடியாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தின் இன்னும் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில், 100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறி வருகிறது. முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்த பாரதப் பிரதமரின் கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்திற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு, கடந்த ஆண்டு வரை வழங்கிய நிதி 5,886 கோடி ரூபாய். அந்தத் திட்டத்தை, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று பெயர் மாற்றி, அரசாணை வெளியிட்ட தி.மு.க., அரசு, இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை? மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கும் தி.மு.க., அரசு, அந்தத் திட்டங்களை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 2025ம் ஆண்டிலும், தமிழக கிராம மாணவ, மாணவியர், கல்வி கற்பதற்காக, பரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பது, வெறும் விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., ஆட்சியில் தமிழகம் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, தி.மு.க., புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் அது இருக்க வேண்டும்.உடனடியாக, அம்மாபாளையம் பகுதியில், பவானி ஆற்றைக் கடக்க, உயர்மட்டப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், கிராமங்கள், சாலைகளால் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வரை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sivasubramaniamems
ஜூலை 12, 2025 18:33

அம்மையார் ஜெயலலிதா வந்த நிதி .இதற்கு எடப்பாடி பதில் சொல்ல வேண்டும்.


அப்பாவி
ஜூலை 05, 2025 07:45

சும்மா வெளிநாடு போய் விருது வாங்குறதும் அப்பிடித்தான்.


Gopalu
ஜூலை 04, 2025 23:58

இவர் ஒரு டம்மி பட்டாசு


K.n. Dhasarathan
ஜூலை 04, 2025 21:20

தி மு க வில் வாடகைக்கு ஆள் பிடித்தால், நைனார் பேரில் நான்கு கோடி ரயிலில் பிடிபட்டதே ? அது எதற்கு ?பொய் ஜே பி அன்னதானம் செய்வதற்கு அல்லி கொடுத்ததா ? கோயிலுக்கு கொடுக்கவா ?அல்லது ஏழை எளியோருக்கு இலவசம் கொடுக்கவா ? விபரம் தேவை


Vijay D Ratnam
ஜூலை 04, 2025 21:14

வாடகைக்கு ஆள் பிடித்து புகழ்பாடும் தி.மு.கவா. அத்த நீங்க சொல்லக்கூடாது சார். வார் ரூம் என்ற பெயரில் உங்க முட்டுபாய்ஸை வச்சி அண்ணாமலை புராணம் பாடுற மாதிரிதான். அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகிறார், அண்ணாமலை கவர்னர் ஆகிறார், அண்ணாமலை அகில இந்திய பாஜக தலைவராகிறார். அண்ணாமலை மோடி வகித்த தேசிய பொதுச்செயலாளர் ஆகிறார். வரும்காலத்தில் அண்ணாமலை பாரத பிரதமர் ஆவார் என்று ஓயாமல் அள்ளிவிட்டுக்கொண்டே இருப்பது போலவா?


Mario
ஜூலை 04, 2025 19:40

வெறும் விளம்பர ஆட்சி, வாடகைக்கு ஆள் பிடித்து புகழ்பாடும் பிஜேபி . அரசு மக்கள் குற்றச்சாட்டு


என்றும் இந்தியன்
ஜூலை 04, 2025 17:31

ஸ்டாலின் நிலைமையை பார்த்தால் எனக்கு மிக மிக மிக பரிதாபமாக இருக்கின்றது. ஒரு தற்குறியை டாஸ்மாக்கினாட்டின் முதல்வர் ஆக்கினால் எவ்வளவு கஷ்டப்படுவார் அவர். ஒரு தெலுங்கனை தமிழில் பேசச்சொன்னால் எவ்வளவு கஷ்டப்படுவார் அவர். ஒரு மனநோயாளியை நல்ல விதமாக பதில் சொல்லச்சொன்னால் எவ்வளவு கஷ்டப்படுவார் அவர். இப்படி அவர் நிலைமையை அடுக்கிக்கொண்டே போகலாம்


அசோகன்
ஜூலை 04, 2025 17:08

தமிழகத்தில் நேர்மையான திறமையான நாட்டு பற்று உள்ள ஒரே அரசியல் தலைவர் அண்ணாமலை மட்டுமே.......... பிஜேபி கைக்கூலிகளே அவரை நீக்கியது வேதனை அளிக்கிறது........ தமிழ் மக்களின் உள்ளங்களை பெரிதும் கவர்ந்துவிட்டார் என்பதற்காகவே ஒதுக்கப்பட்ட கொடுமை


rama adhavan
ஜூலை 04, 2025 20:27

2026 தேர்தல் கூட்டணிக்கு அதிமுக வேண்டுமே. அதனால் அண்ணாமலை கை கழுவப்பட்டார்.மக்களின் கோபமும் எதிர் விளைவும் வரும் தேர்தலில் புரியும்.


என்னத்த சொல்ல
ஜூலை 05, 2025 17:26

தவளை தன வாயால் கெடும்.


ஈசன்
ஜூலை 04, 2025 16:36

அஜித் மரணம் அடைந்த இந்த சூழலில் அண்ணாமலை பாஜக தலைவராக இல்லாமல் இருப்பதற்கு தமிழ் நாடு அரசு அமித்ஷாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்


முக்கிய வீடியோ