உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்

ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: தமிழகத்தையே உலுக்கிய ஈரோடு இரட்டைக் கொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட தம்பதியின் உறவினர்களை பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரியை அடுத்த விளாங்காட்டு வலசைச் சேர்ந்த முதிய தம்பதி ராமசாமி, பாக்கியம். இவர்கள் இருவரும் தோட்டத்து வீட்டில் இருந்த போது, மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். வீட்டினுள் இருந்த 12 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உயரதிகாரிகள், இருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர். தம்பதி கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த வயதான தம்பதியின் உறவினர்களை தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்தார். அசாதாரணமான சம்பவம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து, அவர் ஆறுதல் கூறினார். இது குறித்து அண்ணாமலை தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; இன்றைய தினம், சமீபத்தில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட .ராமசாமி, பாக்கியம்மாள் ஆகியோரின் இல்லத்துக்குச் சென்று, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம். குற்றம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறித்து, அவர்கள் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு உறுதுணையாக, தமிழக பா.ஜ.,தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொண்டோம். தனியாக வசித்து வருபவர்களைக் குறி வைத்து, தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்களைத் தடுக்க, தி.மு.க., அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தி.மு.க., அரசு முற்றிலும் செயலற்றுப் போய் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

நிக்கோல்தாம்சன்
மே 06, 2025 04:36

உங்களின் கிராமங்களில் இருந்து வங்கதேசத்தினரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுங்கள் , கஞ்சா போன்றவற்றை சர்வசதாரணமாக பேருந்து நிலையைத்தில் பயன்படுத்தும் அவர்கள் பிள்ளைகளை பெற்றுப்போட்டுக்கொண்டே செல்வதால் அவர்களுக்கு உருவாகும் டிப்ரெஷன் அடுத்தவர் மீது பாய்கையில் அப்பாவி தமிழர்கள் உயிரிழக்கிறார்கள்


SIVA ANANDHAN
மே 05, 2025 23:52

எப்போது நடந்த சம்பவம் இது, அண்ணாமலை செய்தியில் நாள் தேதி கூட இல்லை,


கத்தரிக்காய் வியாபாரி
மே 05, 2025 21:37

அண்ணாமலை என்றால் தமிழ்நாடே சும்மா அதிருதுல்ல ?


vivek
மே 05, 2025 20:30

அண்ணாமலையை பார்த்ததும் இந்த பாமர பகோடா காதருது .....உலறுது.....போய் ஓரமா விளையாடு


Ramesh Sargam
மே 05, 2025 20:14

தமிழக மக்களே உங்கள் எல்லோருக்கும் பணிவான விண்ணப்பம். திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்புறுத்தல் என்று பல குற்றங்கள் தினம் தினம் நடக்கிறது. ஆட்சியில் உள்ளவர்கள் அவற்றை கண்டுகொள்வதில்லை. ஆகையால் மக்களாகிய நீங்கள் ஒற்றுமையாக, பத்திரமாக இருக்கவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 2026 தேர்தலில் திமுக முழு தோல்வியடைந்தபிறகுதான் நமக்கு நிம்மதி.


பாமரன்
மே 05, 2025 20:06

எப்போ டெஸ்ஸா கேட்ல இருந்து வந்தாப்ல... உள்ளே விட்டார்களா இல்லையா...??? நார்மலாக ஏர்போர்ட் வாசலில் தானே பல்லு படாமல் எப்படி பண்றதுன்னு ட்ரைனிங் குடுப்பாப்ல... ச்சே எவ்ளோ மிஸ் பண்றோம்...?? அடுத்த ஆபரேஷன் மருத டிஸ்ட்ரிப்யூட்டர அதாவது ஆதீனத்த பாக்குறதுதானே...??? ஏன்னா சமீபத்தில் இவரை மிஞ்சும் அளவிற்கு பொய் சொன்னது அவர்தான்... அதுவும் கேமராவில் மாட்டியவர்... போய் நம்ம காமிராவையும் வச்சிட்டு வாங்க எக்ஸ் மேனேஜர்...???


M R Radha
மே 05, 2025 20:23

தமிழ் தவிர எந்த பாஷையும் தெரியாத கும்மிடிபூண்டிய தாண்டாத கட்டுவின் சமத் தாழ்வு கல்வியை படித்த அறிவில்லாதவன் நீ. அடுத்த வேளைக்கு ஓசி பிரியாணியும் 200ரூவாவுக்கு யாசகம் கேட்பவனெல்லாம் அண்ணாமலையாரைப் பற்றி பேசக் கூடாது


vivek
மே 05, 2025 20:28

குற்றவாளிகளை கண்டுபிடிக்க வக்கில்லை....200 ரூபாய் கூலிக்கு வாய் திறகாதே


Murugesan
மே 05, 2025 23:55

திமுக அயோக்கிய கொள்ளைக்கார நயவஞ்சக திருடனுங்க காலை கழுவிக்குடிக்கிற குடிகார தத்தி உன்னுடைய குடும்பத்தை இதே மாதிரி கொலை செய்தாலும் ஓங்கோல் திருடனுங்களுகு ஓட்டு போடுவ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை