உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் திட்டத்தை மாற்றவில்லை; காங். எம்.பி.,க்கு அண்ணாமலை பதில்

10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் திட்டத்தை மாற்றவில்லை; காங். எம்.பி.,க்கு அண்ணாமலை பதில்

சென்னை: 10 ஆண்டுகளாக அரசுப் பள்ளிக்கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று காங். எம்.பி., சசிகாந்த் செந்திலுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தமது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் மும்மொழிக் கொள்கை என்பது மொழி திணிப்பு, கலாசார ஒழிப்பு என்று விமர்சித்து இருந்தார். இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை காட்டமாக பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை;https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6c05dk0m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹிந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாகத் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். நேற்று நீங்கள் காணொளியில் கூறிய பொய்யையே மீண்டும் எழுத்து வடிவில் கூறுவதால் அது உண்மையாகி விடாது.நகர்ப்புற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவது தானே நியாயமான சமூக நீதி. பத்து வருடமாக அரசுப் பள்ளிக் கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று கூற உங்களுக்கும் வெட்கமில்லை. உங்கள் கூட்டணிக் கட்சி தி.மு.க.,வுக்கும் வெட்கமில்லை. இன்னும் எத்தனை ஆண்டு காலம், திராவிடத்தின் பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் பாடமாகப் படிக்க வேண்டும்? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகன் தொடங்கி, அனைத்து தி.மு.க.,வினர் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் நலனுக்காக, ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தாமல், இரட்டை வேடம் போட்டு, அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க.,வைக் கேள்வி கேட்க எது தடுக்கிறது? அவர்கள் தயவால் பெற்ற பதவியா? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

பல்லவி
மார் 10, 2025 19:45

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மரணங்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க துப்பில்லை மந்திரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு special class பாடம் நடத்த வேண்டும்


பல்லவி
மார் 10, 2025 19:38

அது எப்போதும் நார வாய் தானுங்க கன்னடம் தான் தெரியும் ஆனா இப்ப தமிழ் கத்துக்க வேண்டிய கட்டாயம்


K.n. Dhasarathan
மார் 09, 2025 22:32

அண்ணாமலை அப்படியே கொஞ்சம் பின்னால் திரும்பி பாருங்கள், " I am proud to be a Kannadian " என்று கூறியது இந்த வாய் தானே இப்போ தமிழை காப்பாற்ற வந்தவர் போல நாடகம் ஏன் ? பிரதமர் ஒரு பக்கம் மீட்டிங் பேசும்போதெல்லாம் திருக்குறள் பேசி விட்டு தமிழை வளர்க்க பணம் கேட்டால் ஆப்பு டிக்கிறார், போட்டி போட்டுக்கொண்டு நாடகமா ? இப்போது கர்நாடகாவில் இந்தியை உள்ளே விட்டதற்கு எப்படி வருந்துகிறார்கள் தெரியுமா ? அங்கெ கன்னடம் நான்காவது மொழி ஆகிவிட்டது. நான் ஈங்கே இந்திதான் பேசுவேன் வேறு மொழி பேச மாட்டேன் என்கிறான் வாடா நாட்டவன் திமிராக


தமிழ்
மார் 10, 2025 09:38

அண்னை தமிழ் காப்போம், அணைத்து மொழி படிப்போம். மொழி அரசியலை காலவதியாக்கி விட்டார் அண்ணாமலை. இந்த விசயத்தில் இந்த ஆக்ரோஷமான வசனங்கள் எல்லாம் வேஸ்ட்


Laddoo
மார் 10, 2025 20:14

ஏன்பா அண்ணாமலை கேட்ட கேள்வி என்ன அதற்கு பதில் கொடுக்கக்கூட ஒனக்கு தெரிலியே ? நீ ஒண்ணாங் க்ளாஸ் பெயிலா?


MUTHU
மார் 09, 2025 21:10

கல்வி திட்டத்தை மாற்றினால் முதலில் வாத்தியாருக்கு என்ன நடத்தணும்னு புரியனும்ல. இங்கே வாத்தியாரே பூட்ட கேசுகள்


Venkatesan Srinivasan
மார் 09, 2025 23:34

1960,70களில் நடுத்தர ஊர்களில் அரசு பள்ளிகள் மட்டுமே இருக்கும். அல்லது அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் இருந்தன. இரண்டிலும் பாடத்திட்டம் ஒன்று. இவை தவிர்த்து மதராஸ், கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களிலும், ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு போன்ற இடங்களில் அரசு உதவி பெறாத தனியார் கான்வென்ட் பள்ளிகள் இருந்தன. சில குறிப்பிட்ட உயர் வருமான பிரிவினர் வீட்டு குழந்தைகள் மட்டுமே அந்த கான்வென்ட் பள்ளிகளில் பயிலும் வாய்ப்பு அமையும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் தரம் நன்றாக இருக்கும். இன்றும் பல பழைய மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து பெருமை கொள்ளும் நிகழ்வுகள் உண்டு. அக்காலத்தில் நல்ல தெளிவான கல்வி கொள்கை இருந்த காரணத்தால் எந்த குறிப்பிட்ட வகுப்பு தேர்வு பெற்ற மாணவர்களும் சற்றும் குறைவில்லாத அறிவுத்திறன் சிந்தனை திறன் பெற்று இருந்தனர். பிற்காலத்தில் கோழிப்பண்ணை போன்ற கல்வி சாலைகள் உருவாகி மதிப்பெண் தேர்ச்சி விகிதம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு மாணவர்களை பாடங்களை புரிவதை விட மனனம் செய்ய வைத்து தேர்வுகளை எதிர் கொள்ள வைத்ததால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் குறைந்து தரமில்லாத போட்டிகளை எதிர் கொள்ள இயலாத இளைஞர் உருவாக காரணமாக அமைந்தது. இத்தகைய திறன் குறைந்த கல்வி திட்டத்தை கைவிட வேண்டும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே வாழ்க வளர்க பாரதம் இந்திய தேசிய தமிழ் தமிழகம்.


Mediagoons
மார் 09, 2025 21:07

இக்கால கல்வி திட்டம் , மத்தியின் அந்நிய ரீதியிலான அணைத்து திட்டங்களும் மக்களை, மாணவர்களை இந்துக்களை இந்தியர்களை இழிவுபடுத்துவதற்கும் அந்நியர்களுக்கு காவடி தூக்குவதர்க்காகவும் மட்டுமே மதியால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது


Mediagoons
மார் 09, 2025 21:04

இக்கால கல்வி திட்டஙகள் அனைத்தும் அந்நியர்களுக்கு, கார்போரேட்டு கொள்ளையர்களுக்கு அடிவருடி வேலை செய்வதர்க்காகவே உருவாக்கப்பட்டுள்ளது


Visu
மார் 09, 2025 20:21

திராவிடன் மாதிரி அவன் ஸ்கூல இந்தி வாத்தியாகவும் வெளியே ஒழிக கோக்ஷம் போடவில்லையே


ஆரூர் ரங்
மார் 09, 2025 19:42

1965 முதல் ஹிந்தி மட்டுமே ஆட்சி மொழி. அதுவே கட்டாய பாடம் எனக் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசுதான்.அப்போது நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் காங் அரசை எதிர்த்துதான்( அப்போது திமுக காலிகளே போராட்டம் நடத்துகின்றனர் என ஈவேரா எழுதினார் ).அரசு நிறுவனங்கள், ராணுவம் என்று எல்லாவற்றிலும் ஹிந்திமயமாக்கி அழகு பார்த்தது அதே கட்சிதான். ஹிந்தியை நாடெங்கும் பரப்ப வேண்டும் என ஹிந்தியிலேயே உரையாற்றிய அறிவாளி ப சிதம்பரம். மக்களின் ஞாபகசக்தியை சோதிக்க வேண்டாம்


தேவதாஸ் புனே
மார் 09, 2025 19:03

எதில் வரும்படி உள்ளதோ.... அதில் மட்டுமே நாங்கள் வேலை செய்வோம்....


panneer selvam
மார் 09, 2025 18:07

Have not heard Education minister Mahesh announcement of NEET training at Government schools at free of cost . Please ask your kids to join government school immediately . You may get free uniform with shoe , breakfast & lunch , educational materials , NEET training but do not expect quality education .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை