உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 பேர் பலியான சம்பவத்தில் பொதுமக்களை குற்றவாளியாக்கும் அமைச்சர் ! அண்ணாமலை கண்டனம்

3 பேர் பலியான சம்பவத்தில் பொதுமக்களை குற்றவாளியாக்கும் அமைச்சர் ! அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; குடிநீரில் கழிவுநீர் கலந்ததன் காரணமாகப் பறிபோன மூன்று உயிர்களுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் என்ன பதில் கூறுவார் என்று பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;கடந்த, டிசம்பர் 5 அன்று, சென்னை பல்லாவரத்தில், குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், மூன்று பேர் பலியானதும், இருபதுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுமான துயர சம்பவம் நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன், குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றும், பொதுமக்கள் தவறினால்தான் பாதிப்பு ஏற்பட்டது என்றும், பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1mlxexps&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்தப் பகுதியில் அன்றைய தினங்களில் வழங்கப்பட்ட குடிநீரைப் பரிசோதனைக்கு அனுப்பி, அதன் முடிவுகள் கிடைத்துள்ளன. குடிநீரில், கோலிஃபார்ம் மற்றும் ஈ கோலி ஆகிய பாக்டீரியாக்கள் இருக்கக் கூடாது என்பது, சென்னைப் பெருநகர குடிநீர் வாரியத்தின் தரக் கட்டுப்பாடுகளில் ஒன்று. ஆனால், பல்லாவரம் பகுதியில் வழங்கப்பட்ட குடிநீரில் இந்த இரண்டு பாக்டீரியாக்களும் இருப்பது, சோதனை முடிவில் வெளிப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்கும் போது, அடிப்படை சோதனைகளைக் கூட மேற்கொள்ளாமல், தங்கள் நிர்வாகத் தோல்வியை, தவறுகளை மறைத்து, அதிகாரத் திமிரின் உச்சத்தில், பொதுமக்களைக் குற்றவாளியாக்க முயன்ற அமைச்சர் தா.மோ. அன்பரசன், குடிநீரில் கழிவுநீர் கலந்ததன் காரணமாகப் பறிபோன மூன்று உயிர்களுக்கு என்ன பதில் கூறுவார்? இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

PARTHASARATHI J S
டிச 14, 2024 06:17

அமைச்சர் என்று எதற்கு ? பொறுப்பே கிடையாதா ? பிரச்னையின் ஆழம் தெரியாமல் வேடிக்கை பார்க்க அமைச்சர் தேவையா ? திமுக அமைச்சர்கள் தங்கள் தவறுகளை பொதுவெளியில் ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கதா மனநிலையால் மக்கள் சேற்றை அடிக்கிறார்கள். ஒரு துர்செயலுக்கு எதிர்வினை இன்னொரு துர்வினை. அமைச்சர்கள் கடமை கத்திமேல் நடப்பது போல்தான்.


Barakat Ali
டிச 13, 2024 18:50

பழனிச்சாமி பெவிலியன்லயே இருக்காரு .... இறங்கி அடிக்க மாட்டேன் ன்றாரே ....


N.Purushothaman
டிச 13, 2024 18:22

பொறுப்பற்ற திருட்டு திராவிட அமைச்சருக்கு இன்னொரு திருட்டு திராவிடன் முட்டு கொடுப்பது காசுக்காகவும் சோத்துக்காகவும் எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருப்பது உறுதியாகிறது .....இந்த பொழப்புக்கு ....


bharathi
டிச 13, 2024 17:35

sambathu mattu komiyam is fine for us...but you continue with whatever you are consuming


Vijay
டிச 13, 2024 17:25

ஏண்டா அவர் நியாயத்தை கேட்டால் மாட்டு கோமியமா. குண்டு வெக்குறவன் மூளை இப்படி வேலை செய்யும்


அப்பாவி
டிச 13, 2024 17:20

எத்தனை பேர் அதே தண்ணியை குடிச்சிருப்பாங்க? இதுக்கெல்லாம் அரசை குறை கூறிக்கிட்டு அரசியல் நடத்தினால் இருக்கறதும் புட்டுக்கும்.


Kumar Kumzi
டிச 13, 2024 18:58

நல்லா முட்டு குடு கொத்தடிமையே


rama adhavan
டிச 13, 2024 19:05

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் சிலர். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றோர் பலர். எனவே இந்நிகழ்ச்சிக்கு துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் பொறுப்பல்ல என சொல்வீர்களா?


P Karthikeyan
டிச 13, 2024 16:55

அல்லு அர்ஜுனை எந்த அடிப்படையில் கைது செய்தார்களோ அதே அடிப்படையிலே அன்பரசனையும் கைது செய்யலாம் வழக்கும் போடலாம் ..சென்னை உயர் நீதிமன்றம் செய்யுமா ..திமுக வழக்கறிஞர்கள் விடுவார்களா ...தமிழகத்தில் நீதிக்கு இடமே இல்லை ..பொய் சொல்லி பதவியில் அமர்ந்தவர்கள் ...


Sampath Kumar
டிச 13, 2024 16:50

நீ வந்து மாட்டு கோமியத்தை கலந்து விடு ஆடு குட்டி எல்லாம் சரியப்போகும்


Amsi Ramesh
டிச 13, 2024 17:23

கொஞ்சமாவது சுயமாக சிந்திக்கவும் ... பாவம் அதுதான் இல்லையே


hari
டிச 13, 2024 19:53

டாஸ்மாக் மூளை உனக்கு சம்பத்து....டாஸ்மாக்கை விட கோமியம் எவ்வளவோ மேல்....வீட்ல பெரியவங்க இருந்தா கேட்டு பாரு


raja
டிச 13, 2024 16:43

கேடுகெட்ட இழி பிறவிகள் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்தை அடித்து விரட்டாதவரை தமிழனுக்கு விடிவில்லை...


என்றும் இந்தியன்
டிச 13, 2024 16:43

புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆன சமயத்தில் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் கைது. அப்போ 3 பேர் பலியான சம்பவத்தில் தா மோ அன்பரசன்?????????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை