உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் வாஜ்பாய் சிலை அமைக்க முதல்வரை சந்திக்க பா.ஜ., முடிவு

சென்னையில் வாஜ்பாய் சிலை அமைக்க முதல்வரை சந்திக்க பா.ஜ., முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, சென்னையில் முக்கியமான இடத்தில் சிலை அமைக்க, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பா.ஜ.,வின் முன்னோடி அமைப்பான ஜன சங்கம், துவக்கப்பட்டதில் இருந்து, அரசியலில் இருந்த வாஜ்பாய், ஆறு ஆண்டுகள் பிரதமராகவும், அரை நுாற்றாண்டு காலம் எம்.பி.,யாகவும் இருந்தவர். இந்தியாவில் அமைந்த முதல் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பலமுறை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். அவரது சாதனைகள் இன்றளவும் பேசப்படுகின்றன.மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஓர் அரசையும், கூட்டணி அரசையும், முதல்முறையாக முழு பதவிக்காலமும் வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். தொடர்ந்து மூன்றாவது முறையாக, பா.ஜ., தலைமையில் ஆட்சி நடப்பதற்கு, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் போட்ட அடித்தளமே காரணம். நாளை, வாஜ்பாய் பிறந்து 100 ஆண்டு நிறைவடைகிறது. அன்றைய தினத்தை நாடெங்கும் சிறப்பாக கொண்டாட, பா.ஜ., ஏற்பாடுகளை செய்து வருகிறது. வாஜ்பாய் 100 ஆண்டு நிறைவையொட்டி, சென்னையில் அவருக்கு சிலை அமைக்க, கடந்த ஓராண்டுக்கும் மேலாக பா.ஜ., முயற்சித்து வருகிறது. ஆனால், பொது இடங்களில் தலைவர்களின் சிலை அமைக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது; மாநில அரசின் ஒத்துழைப்பின்மை ஆகியவற்றால் அது சாத்தியமாகவில்லை.முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு, சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாநிலக் கல்லுாரி வளாகத்தில், கடந்த ஆண்டு சிலை அமைக்கப்பட்டது. அதுபோல், அரசு கல்வி நிறுவனங்கள் அல்லது அரசுக்கு சொந்தமான இடத்தில் வாஜ்பாய்க்கு சிலை அமைக்க, பா.ஜ., முக்கிய தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இது குறித்து பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'சென்னையில் வாஜ்பாய்க்கு சிலை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அவர் பெயர் வைக்க வேண்டும் என, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. சென்னையில் முக்கியமான இடத்தில் வாஜ்பாய் சிலை அமைக்க இடம் ஒதுக்கக்கோரி, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். இந்த முயற்சிகளுக்கு உதவும்படி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தி இருக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Vijay D Ratnam
டிச 24, 2024 14:55

இங்கன இருக்குற சிலைகள் பத்தாதுன்னு வாஜ்பாய் சிலை வேறா.


திகழ்ஓவியன்
டிச 24, 2024 12:49

வெற்றி பெற்று சந்தோஷமா சிலை வைக்கலாமே


vivek
டிச 24, 2024 13:25

நீங்க கருணாநிதிக்கு கடல் சிலையை சொல்றீங்களா.......


T.sthivinayagam
டிச 24, 2024 12:14

தமிழக அரசும் தமிழக மக்களும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் மீது மரியாதை வைத்து உள்ளனர்.அதனால் சிகப்பு கலர் நீலகலர் காவிகலர் பச்சை கலர் என்று மாமனிதர்களை அவமதிக்க வேண்டாம்


Sundar R
டிச 24, 2024 11:18

போயும் போயும் திமுகவிடம் கெஞ்சுவதா? பாஜகவுக்கு இதைவிட அசிங்கம் ஏதுமில்லை. பாஜகவோ அல்லது தமிழகத்திலுள்ள எந்த கட்சியோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திமுகவுடன் எந்தவிதமான டீலிங் வைத்துக் கொண்டாலும் அவை தமிழகத்திற்கும், தமிழக மக்களின் நலனுக்கும் எதிரானதாகவே இருக்கும்.


ஆரூர் ரங்
டிச 24, 2024 10:22

முரசொலி மாறன் கோமாவிலிருந்த நேரத்திலும் இலாகா இல்லாத அமைச்சராக தொடரவிட்டு வெளிநாட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததற்கும் நன்றிக்கடன் பாக்கியுள்ளது. ஆனா முட்டுச்சந்தில் மட்டுமே சிலை வைக்க அனுமதி தருவர்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2024 12:12

இலாகா இல்லாத அமைச்சராக தொடரவிட்டு வெளிநாட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததற்கும் நன்றிக்கடன் பாக்கியுள்ளது ...... அந்த நன்றிக்கடன் ஐ ஆற்றாமல் தேசவிரோத கட்சியை நாம் விட்டு வைப்போமா ???? ஹேமந்த் சோரன், கெஜ்ரிவாலின் கதி வந்துவிடாதா ????


N.Purushothaman
டிச 24, 2024 10:20

என்னை பொறுத்தவரை தமிழக /இந்திய அரசியல் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டுமென்றால் மூலைக்கு மூலை உள்ள கட்சி கொடிகள் சிலைகள் போன்றவற்றை அகற்றி தேவைப்படுவோர்கள் அவர்களின் கட்சி அலுவலகங்களில் வைத்து கொள்ளலாம் என்கிற நடைமுறையை கொண்டு வர வேண்டும் ...அல்லது ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் இதற்க்கென ஒரு கட்டிடம் உருவாக்கி அதன் உள்ளரங்கில் வைக்க வேண்டும்....அல்லது மாவட்ட நூலகங்களில் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து அப்படி செய்யலாம் ...


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2024 09:28

தலைவர்கள் முக்கியமல்ல.. கொள்கைதான் முக்கியம் ன்னு பேசுற ஆர்எஸ்எஸ் என்ன சொல்லுது ????


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2024 09:27

கட்டுமரத்தின் பேனா சிலையை வைப்பது அதைவிட முக்கியம் ....


Bhaskaran
டிச 24, 2024 09:16

வ.பி சிங்க் சிலை வைக்க ஓ.கே வாஜ்பாய் சிலை வைக்க அரசு யோசிப்பாங்க


raja
டிச 24, 2024 08:56

வெண்டாய்யா வேண்டாம்...கொள்ளையன் சிலையை ஊருக்கு ஊரு வைத்து விட்டு நடுவில் நல்லவன் சிலையை வைத்தால் வரும் காலம் நல்லவனையும் கொள்ளையன் என்று கூறும்... மேலும் வரும் சந்ததிகள் திருட்டு கொள்ளையர்கள் நிறைத்த மாநிலம் என்று ஒன்கொள் திராவிட கோவால் புற கட்டுமர குடும்பத்தை மட்டும் கூறாமல் ஒட்டு மொத்த தமிழர்களையும் தூற்றும்...இதில் எதுக்கு ஒரு நல்லவரின் சிலை ...அதனால் வேண்டாம் அய்யா வேண்டாம்...


முக்கிய வீடியோ