40 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மோடி பிறந்த நாளில் பா.ஜ., அணிவிப்பு
சென்னை: பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, வடசென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில், ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கலந்து கொண்டு, 40 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். பின் அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் துாய்மை பணி மேற்கொண்டோம். ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில், மோடி பிறந்த நாளில், பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கினோம். மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்காக பிரசாரம் செய்வேன் என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறினார். இப்போது அதற்கு எதிராக பேசுகிறார். இவ்வாறு கூறினார்.