உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்களுக்கு பா.ஜ., அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும்: நிர்மலா சீதாராமன் உறுதி

தமிழக மீனவர்களுக்கு பா.ஜ., அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும்: நிர்மலா சீதாராமன் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'தமிழக மீனவர்களுக்கு, மத்திய அரசு உறுதுணையாக நிற்கும்.' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், வல்லவிளையை சேர்ந்த மீனவர்கள், கடலில் சிக்கி தவிப்பது குறித்த தகவலை கூறி, அவர்களை மீட்கும்படி, தமிழக பா.ஜ., மீனவர் பிரிவு அமைப்பாளர் சீமா கோரினார். இதையடுத்து ,வல்லவிளை கிராமத்தில் உள்ள, புனித மேரி தேவாலயத்தின் பாதிரியார் தாமசுடன், எனது அலுவலக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர்.அப்போது, 'ஆழ்கடலில் மீன் பிடித்து வரும் பல மீனவர்களின் செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பு செயலிழந்து உள்ளது' என, அவர் கூறினார். அந்த பகுதியில், மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. எனவே, மீனவர்கள், பாதுகாப்பாக கரைக்கு திரும்ப, வழிகாட்டும் வகையில், செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பை, மீண்டும் செயல்படுத்தி தர கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் பி.எஸ்.என்.எல். செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை பயன்படுத்தவில்லை என்றாலும், தற்போது தனியார் தொலைதொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, இணைப்பை தற்காலிகமாக மீட்டெடுக்கும் பணியில், மத்திய தகவல் தொடர்பு துறை மற்றும் பி.எஸ்.என்.எல், ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, தமிழக மீனவர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும், எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படுவதோடு, தேவையான காலத்தில், அவர்களுடன் உறுதுணையாக நிற்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mr Krish Tamilnadu
அக் 20, 2025 04:48

ஓ.கே. ஏதோ தற்காலிக தீர்வு ரெடி. பா.ஜ.க ஸ்டிக்கர் ரெடி.


Ramesh Sargam
அக் 20, 2025 00:10

கற்பனை: அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேட்டேன், நீங்க உலகத்தில் சமீபத்தில் பல நாடுகளுக்கிடையேயான நடந்த எட்டு போர்களை நிறுத்தி இருக்கிறீர்கள். அதற்கு முதலில் நன்றி. உங்களுக்கு ஒரு சேலஞ்சு : இந்த இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கும், அருகில் உள்ள அந்த குட்டி இலங்கை அரசுக்கும் பல காலமாக நடக்கும் பிரச்சினையை உங்களால தீர்த்துவைக்கமுடியுமா என்று. அதை கேட்டு அவர் என்னைப்பார்த்து முறைத்தார் பாருங்கள்... பயத்தில் அப்படியே ஓடிவந்துட்டேன். யாராலும் தீர்க்கமுடியாத பிரச்சினை இந்த இந்திய நாட்டின் தமிழக மீனவர்கள் பிரச்சினை.


Priyan Vadanad
அக் 19, 2025 22:58

கிழிஞ்சிது போங்க. அம்மா இப்பதான் கோமாவில இருந்து முழிச்சிருக்காங்க போல.


vivek
அக் 20, 2025 03:51

அதானே கச்சதீவை தாரை வார்த்தது திருட்டு திமுக தானே பிரியன் வடை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை