உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்க்கவே பரிதாபமா இருக்கு: அமைச்சர் சேகர்பாபுக்கு அண்ணாமலை கண்டனம்

பார்க்கவே பரிதாபமா இருக்கு: அமைச்சர் சேகர்பாபுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: 'பக்தர்களின் வெறுப்பையும், கோபத்தையும், சாபத்தையும் பெறும் வகையில் நடந்து கொண்டு, ரங்கநாதர் அருள் தருவார் என்று நம்பும் அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது' என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cn7wq7xk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நேற்றைய தினம் அதிகாலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின், பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிகழ்வுக்காக, ஆண்டுதோறும் கோவிலுக்குள் சென்று சொர்க்கவாசல் கடக்கவும், சுவாமி தரிசனம் செய்யவும் பக்தர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து வருகிறது இந்து சமய அறநிலையத்துறை. இந்த ஆண்டும் பெருவாரியான பக்தர்கள், இந்த புண்ணிய நிகழ்வில் கலந்துகொள்ள, கட்டணம் செலுத்தி, நடுநிசியிலிருந்தே காத்துக்கொண்டிருக்கையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவருடைய குடும்பத்தினருடன் வந்ததால், பக்தர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்திருக்கின்றனர். குறிப்பாக, அமைச்சர் சேகர்பாபு, அங்கிருந்த பக்தர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் விரட்டியிருக்கிறார்.அமைச்சர் சேகர்பாபு அவர்களின் குடும்பம், ஒரு புண்ணிய தினத்தன்று கோவில் நிகழ்வில் கலந்து கொள்ள பக்தர்களை அனுமதிக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அனைத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அமைச்சர் சேகர்பாபு அந்த எல்லையை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். உடலில் எண்ணெய்யைப் பூசிக்கொண்டு மண்ணில் உருண்டாலும், ஒட்டுவதுதான் ஒட்டும் என்ற பழமொழியை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு புண்ணிய தினத்தன்று, பகவான் சன்னிதியில் அத்தனை பக்தர்களின் வெறுப்பையும், கோபத்தையும், சாபத்தையும் பெறும் வகையில் நடந்து கொண்டு, ரங்கநாதர் அருள் தருவார் என்று நம்பும் அமைச்சரைப் பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

என்றும் இந்தியன்
ஜன 11, 2025 18:47

சேகர் பாபர் ஹுமாயுன் செய்யும் செயல் வார்த்தை ஜாலம் அப்படித்தானிருக்கும்


INDIAN Kumar
ஜன 11, 2025 17:53

தெய்வம் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறது , நின்று கொல்லும் யாரும் தப்ப முடியாது


INDIAN Kumar
ஜன 11, 2025 17:50

அணைத்து உயிர்களும் சமம் ,இறைவனை தேடி அலைய வேண்டாம் ,உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம் நல்ல இதயங்களில் இறைவன் வாழ்கிறான் அன்பே சிவம்


M Ramachandran
ஜன 11, 2025 16:40

அத்தனை பக்தர்களின் வெறுப்பையும், கோபத்தையும், சாபத்தையும் பெறும் வகையில் நடந்து கொண்டு, ரங்கநாதர் அருள் தருவார் என்று நம்பும் அமைச்சரைப் பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது, பட்டாச்சாரியர்களுக்கு பயம் ஒரு புறம் மறுபுறம் பக்கதர்களின் சாபம் மற்றொருபுறம் வாட்டி வதைக்கிறது. நல்லவேளை கணவனின் கருமத்தை துடைக்க கோயில் கோயிலாகா சுத்தும் ஸ்டாலின் துணைவி துர்கா தேவி தரிசனத்திற்கு வந்து இன்னும் 3 மணி நேரம் காக்க வைக்க வில்லை. அண்ணாமலை கூறுவது போல் அறநிலையய் துறைய்ய கலைக்க பட வேண்டும்.


chandrasekar
ஜன 11, 2025 15:02

சேகர்பாபு சாதாரண அமைச்சர் தான். எந்த உயர் பாதுகாப்பிலும் இல்லை. மேலும் அவர் வந்தது விசேஷ நாள். அவர் மட்டும் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் சிறப்பு கட்டண டிக்கெட் விற்று இருக்க கூடாது.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 11, 2025 14:21

பரிதாபமா இருக்கா? என்ன சார் சொல்றீங்க? செம கெத்தா கோவிலுக்கும் சென்று சொர்க்க வாசல் பிரவேசமும் செய்து விட்டு சூப்பரா காரில் ஏறிப் போனார். உங்களுக்கு பரிதாபமா இருந்துதா?? VIP ன்னா இதெல்லாம் சாதாரணம். பரிதாபமா இருக்கிறது நீங்கள் தான். இதெல்லாம் ஒரு issue ன்னு அறிக்கை வுட்டுக்கிட்டு...


veera
ஜன 11, 2025 22:32

நீங்க போகலையா வைகுண்டம்...அய்யோ பாவம்....சே..பா...வரும்போது உம்மை உள்ளே விட்டு இருக்கா மாட்டாங்க...think deep vaigu


Ramesh Sargam
ஜன 11, 2025 12:56

ஹைதெராபாத் அருகே சிலுக்கூர் என்கிற ஊரில் உள்ள பிரசித்திபெற்ற பெருமாள் கோவில் வாசல் முகப்பில் ஒரு அறிவிப்பு - இங்கு VVIP, VIP தரிசனம் கிடையாது என்று. அதுபோலவே அங்கு எப்படியாப்பட்ட VVIP, VIP -க்கள் வந்தாலும் வரிசையில் நின்றுதான் சாமி தரிசனம் செய்யவேண்டும் என்று அக்கோவில் நிர்வாகம் கடுமையாக செயல்படுகிறது. அவர்களைப்போல மற்ற கோவில்களிலும் சிறப்பு தரிசனம் தடை செய்யப்படவேண்டும். கடவுள் முன் எல்லோரும் ஒன்றே...


V வைகுண்டேஸ்வரன்
ஜன 11, 2025 20:40

அப்படியா? அப்புறம் ஏன் சிதம்பரம் கோவில் கனகசபை மண்டபத்துக்குள் இவர் வரக்கூடாது, அவர் வரக்கூடாது என்கிறார்கள்??


Barakat Ali
ஜன 11, 2025 12:50

ஈவேரா என்ன சொன்னார் ???? அவர் சொன்னதுக்கு மாறா அமைச்சர் கோவிலில் போயி சாமி தரிசனம் பண்ணியிருக்கார் ..... ......


MANIMARAN R
ஜன 11, 2025 12:43

சேகர் பாபு வந்தேறி என்பதால் பிரச்சினையா இல்லை அமைச்சர் என்பதால் பிரச்சினையா ?. உங்களை என்ன செய்தார்கள் ?


Sambath
ஜன 11, 2025 14:03

பக்தர்கள் துன்பப் படக்கூடாது.


K.prakash K.prakash
ஜன 11, 2025 18:04

இந்த நொண்ணா மலை போயிருந்தா 100 அல்ல கையோடு லைன்ல நின்னு போயிருப்பாரா


அப்பாவி
ஜன 11, 2025 12:24

இதே ஸ்ரீரங்கத்துக்கு ஜீ வந்த போது ஊரையே அடிச்சு முடக்கினாங்களே , ஸ்பீடு பிரேக்கர்களைக் கூட உடைச்சாங்களே மறந்து போச்சா அண்ணாமலை? தனுஷ்கோடியில் இருந்தவங்களை வெளியேத்திட்டு தனியா பூஜை பண்ணினாரே ஜீ அப்போ எங்கே போனீங்ஜ அண்ணாமலை?


veera
ஜன 12, 2025 06:03

பசுமாடிற்கும் கழுதைக்கு வித்தியாசம் இருக்கு அப்பாவி...


veera
ஜன 12, 2025 06:24

பசுமாடிற்கும் கழுதைக்கு வித்தியாசம் இருக்கு...உன் பூனை கண்ணுக்கு தெரியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை