உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபாஷ்... சரியான கேள்வி; அ.தி.மு.க.,வை பாராட்டிய அண்ணாமலை

சபாஷ்... சரியான கேள்வி; அ.தி.மு.க.,வை பாராட்டிய அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை வன்கொடுமை விவகாரத்தை கையில் எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். மேலும், மாணவி அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு, செல்போனில் யாரோ ஒருவருடன் 'சார்' எனக் கூறியபடி ஞானசேகரன் பேசியதாக கூறியிருந்தார். இது இந்த வழக்கை வேறு கோணத்திற்கு எடுத்துச் சென்றது. அப்படி எனில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் தொடர் கதையாக அரங்கேறி வருகிறதா? ஞானசேகரனுடன் பேசியவர் யார்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கண்டனம் தெரிவித்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் சாட்டையால் அடித்து நூதன போராட்டம் நடத்தினார். மேலும், அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, 'யார் அந்த சார்' என்ற பதாகைகளை ஏந்தியபடி சென்னை இ.ஏ., மால் வளாகத்தில் அ.தி.மு.க.,வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மாலில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், அ.தி.மு.க.,வினரின் இந்த போராட்டத்திற்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'ஒரு சாமானியனைப் பாதிக்கும் எந்தவொரு பிரச்னையிலும் அரசியல் இருக்காது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை பிரச்னையை கையில் எடுத்து, முக்கியமான கேள்வி எழுப்பிய அ.தி.மு.க., ஐடி விங்கை பாராட்டுகிறேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

karutthu kandhasamy
டிச 30, 2024 20:03

இந்தசெயல் கண்டிக்கத்தக்கது ஊடகங்கள் , பத்திரிகைகள் அரசியல்வாதிகள் இதை வைத்து அவியல் செய்யாமல் அரசியல் செய்கின்றனர் ஊடகங்கள் பத்திரிகைகளும் எல்லை மீறுகின்றனர் இது 1 மாதத்தில் பேசிமறைந்துவிடும் .ஆனால் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் வருங்காலத்தை யாராவது சிந்தித்து பார்த்தீர்களா ? பாதிக்கப்பட்ட பெண்ணின் வருங்காலம் அவரின் மன நிம்மதி எல்லாம் போய்விட்டது நாளை அந்த பென்கல்லூரிக்கு போகும்பொழுது அவரை பார்த்து எள்ளி நகையாடுவார்கள் அதை அந்த பெண் பொறுத்துக்கொள்ளவேண்டும் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்கவேண்டும் ,இந்த நிகழ்ச்சியால் அந்த குடும்பம் வேதனைப்படும் வெட்கப்படும் கைதான ஞானசேகரனின் Testcles remove செய்ய வேண்டும் அவனை ஜாமீனில் வரமுடியாதபடி வழக்கு போட்டு இரட்டை ஆயுள் கடுங்காவல் தண்டனை கொடுக்கவேண்டும் மற்றும் இந்த பெண் தான் விரும்பும் கல்லூரியில் படிக்கவைக்கவேண்டும் இம்மாதிரி செய்தால் வரும்காலத்தில் இப்படி செய்ய பயப்படுவார்கள் என்பது ஏன் கருத்து


RAAJ68
டிச 30, 2024 08:52

கூட்டணிக்காக காக்காய் பிடிக்காதீர்கள் அண்ணாமலை


D.Ambujavalli
டிச 30, 2024 06:27

அன்று ‘கட்டப்பாவைக் கொன்றது யார்’ என்று நாடெங்கும் உலவிய quizz இந்த மறு பாதிப்பு இன்றைய ‘ஸார்வாள்’ மர்மம் அப்படியே அவன் வாய் திறந்துவிட்டாலும் அவன் ‘தற்கொலை’ செய்விக்கப்படுவான் சிபிஐ நுழைந்தால் அவர்களுக்கு விவரம் கொடுக்காமல் எட்டு வருஷம் இழுத்தடிப்பார்கள் குழுவின் விசாரணையில் எதுவும் வெளியாகாது, ஆகவும் விடமாட்டார்கள் இது மாதிரி எத்தனையோ பார்த்தவர்களாயிற்றே


ManiK
டிச 30, 2024 06:15

அண்ணாமலை இன்னும் ஐபிஎஸ் போலீஸ் வேலை இலவசமா பார்ப்பதால் தான் இந்த கேடுகெட்ட திமுக அரசின் வண்டவாளங்கள் ஓரளவு மக்களுக்கு தெரிகிறது. எல்லாத்தையும் அவரே செய்யனும்னா சிம் முந்திரி எல்லாரும் எதுக்கு??


Senthoora
டிச 30, 2024 06:04

டெல்லியில் இவருக்கு கல்தா கொடுக்கப்போறாங்க, அதான் அண்ணாதிமுகவுக்கு துதிபாடுகிறார். ஆனால் இவருக்கு அண்ணாதிமுகவின் திராவிட மடல் என்ன என்று. ஆட்சிக்கு வந்தா எட்டி உதைப்பாங்க, அதுக்கு அப்புறம் சாட்டையை எடுத்து சுழட்டி, ஆட்சியை கலைப்பேன் என்று கோமாளித்தனம் பண்ணுவார். கோமாளி என்றும் கோமாளிதான். கமலின் அபூர்வ சகோதர் படத்தை அண்ணாமலை ஒரு முறை பார்த்தால் நல்லது.


veera
டிச 30, 2024 07:28

மக்கள் திமுகவை விரட்ட போறாங்க. அந்த கவலை செந்தூர உனக்கு


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 30, 2024 08:52

சிட்னில சட்னி அரைக்கும் உனக்கு அண்ணாமலையை பற்றி என்ன தெரியும், வசதியாய் வாழும் உனக்கு கேவலம் 200ரு முட்டு கொடுக்குறியே படித்த முட்டாளே....!!!


Rpalni
டிச 30, 2024 11:20

உன்வீட்டில் நடந்தால் இதே மாதிரி. கருத்தை பதிவு செய்வாயா?


Rajarajan
டிச 30, 2024 05:52

மத்திய உள்துறையிடம் புகார் தெரிவியுங்கள். மத்திய குழுவை வைத்து, குற்றவாளியை துருவி துறவி விசாரியுங்கள். உண்மை கண்டறியும் சோதனை செய்யுங்கள். இதற்கு நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெறுங்கள். முடிந்தது பிரச்சினை. இதற்கெல்லாம் மேலாக குற்றவாளியின் உயிருக்கு பாதுகாப்பு அளியுங்கள். விசாரணையை துரிதப்படுத்தி, பொதுமக்களிடம் தோல் அறியுங்கள். இதற்குமேல் என்ன இருக்கிறது ? கோஷம் எல்லாம் உதவாது.


spr
டிச 30, 2024 00:59

"இன்று அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, யார் அந்த சார் என்ற பதாகைகளை ஏந்தியபடி சென்னை இ.ஏ., மால் வளாகத்தில் அ.தி.மு.க.,வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்." இப்படி கேள்வி கேட்பதனைவிட அவர்களுடன் ஒன்றிணைந்து வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதே அரசியல் சாணக்கியம் சவுக்கால் அடித்துக் கொள்வது கோமாளித்தனம். சுயநல எண்ணம் என்றாலும், அன்று ராஜாஜி காங்கிரஸைத் தோற்கடிக்க அவரே விரும்பாத திமுகவுடன் கூட்டணி வைத்துப் போராடவில்லையா தமிழகத்துக்குத் தீராத வியாதியைக் கொண்டு வரவில்லையா திமுகவை விட அஇஅதிமுக அத்தனை மோசமில்லை ஏனெனில் செந்தில் போல பல குற்றவாளிகள் அஇஅதிமுகவை விட்டு விலகி திமுகவில் இணைந்து விட்டதால் அஇஅதிமுக இன்று ஓரளவு புனிதமாகிவிட்டது. பாஜக பாமக தேமுதிக அஇஅதிமுக இ பிஎஸ் இணைந்தால் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புண்டு கணிசமான வகையில், ஓபிஎஸ் சீமான் விஜய் போன்றோர் திமுக வாக்குகளைச் சிதற அடிப்பார்கள்


rama adhavan
டிச 29, 2024 23:04

நிருபர்கள் பேட்டியில் காவல் அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவரின் மொபைல் சைலன்ட் மோட்இல் இருந்தது என்றாரே, அது பொய்யா அல்லது குற்றவாளி பல மொபைல் போன் கையாள்பவரா தெரியவில்லையே?


Barakat Ali
டிச 29, 2024 22:35

அந்த சார் யாரு ? கிறிஸ்தவனாக இருப்பதில் பெருமையடைகிறேன் ன்னு அடிக்கடி சொல்றவனா ?


Constitutional Goons
டிச 29, 2024 22:34

ஒரு பிரதான கட்சியின் IT விங்கால் ஒருநபரின் போன் நம்பரை கண்டுபிடிக்க முடியவில்லையா ? டெல்லியிலிருந்து வந்துள்ள மோடியின் ஆட்களிடமோ அல்லது அவர்களின் ஏஜெண்டுகளான நீதிபதிகள் அனுப்பிய குழுவிடமோ போலீசு ரிப்போர்ட்டிலிருந்து கள்ளத்தனமாக பெற்றுக்கொள்ளலாம்


பேசும் தமிழன்
டிச 30, 2024 07:37

கள்ளத்தனம்.... திருட்டு.... பெண் வன்கொடுமை.... எல்லாம் உங்கள் கட்சி ஆட்கள் செய்வது.... அதில் உங்களை யாரும் அடிச்சிக்க முடியாது.


Anonymous
டிச 30, 2024 13:29

எல்லாத்திலயும் மத்திய அரசு மூக்கை நுழைத்து, துப்பு துலக்கி கண்டு பிடிக்கனும்னு சொன்னா, அப்போ இங்கே இந்த விடியல் அரசுக்கு என்ன தான் வேலை? தப்பு செய்யுறவனை காப்பாத்துறதும், உங்கள் முதல்வரையும், து முவயும் பற்றி யாராவது பேசுனா, போஸ்டரு மேல செருப்பு வீசுற புள்ளை பூச்சிங்களை தேடி தேடி, கைது செய்யுறது மட்டும் தான் தமிழக விடியல் அரசின் வேலை போல.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை