உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  படுகர் மொழியில் பேசி பா.ஜ., தலைவர் பிரசாரம்

 படுகர் மொழியில் பேசி பா.ஜ., தலைவர் பிரசாரம்

கோத்தகிரி: படுகர் இன மக்களின் படுகு மொழியில் பேசி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஓட்டு சேகரித்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டி தொகுதி, தொதநாடு சீமைக்கு உட்பட்ட கூக்கல்தொறை பஜாரில், பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்தார். அப்போது, 'நிங்க எல்லா ஒள்ளங்கெ இத்தரா; நிங்க மனையோக எல்லா ஒள்ளங்கெ இத்தரா. நிங்க எல்லாவு தாமரை சின்னக ஓட்டு ஆக்கிவி, ஊட்டி தொகுதிய நித்திப்ப போஜராஜ அவக்கர ஜெயிச்சி பீயபேக்கு' என பேசினார். இது குறித்து படுகர் இன மக்களிடம் கேட்டபோது, 'நீங்கள் எல்லாரும் நலமா; உங்கள் வீட்டில் அனைவரும் நலமா. நீங்கள் எல்லாரும் தாமரை சின்னத்துக்கு ஓட்டளித்து, பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை வெற்றி பெற செய்ய வேண்டும்' என நயினார் நாகேந்திரன் பேசியதாக கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ