உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,; அ.தி.மு.க.,வுக்கு அனுதாபப்படுகிறார் திருமா

பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,; அ.தி.மு.க.,வுக்கு அனுதாபப்படுகிறார் திருமா

சென்னை: '' வலுவாக இருக்கும் அ.தி.மு.க.,வை கூட்டணி ஆட்சி என பேசி பலவீனப்படுத்த பா.ஜ., முயற்சி செய்கிறது,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.நிருபர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கோட்பாடு முக்கியம். பா.ஜ.,வின் கொள்கை அவர்களுக்கு அதை தாண்டி நட்பு இருப்பது தவறு இல்லை. கே.பி.ராமலிங்கம் நன்கு அறிமுகமானவர். நன்கு பழக்கமானவர். தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த போது பார்லிமென்ட் மைய மண்டபத்தில் சந்தித்துள்ளோம். அந்த நட்பு அடிப்படையில் சந்திக்க வந்தால் வரவேற்போம். அதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், பா.ஜ., கொள்கை அம்பேத்கர் குறிக்கோள்களுக்கு நேர் முரணானது என்பதை நாங்கள் புரிந்து இருக்கிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.தி.மு.க., உடன் உள்ளதால், நாங்கள் பா.ஜ.,வை எதிர்ப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அது அல்ல. தி.மு.க., கூட்டணி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி பா.ஜ., கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் தனியாக இருந்தாலும் எதிர்ப்போம். அதற்கு காரணம் பா.ஜ., மீது உள்ள தனிப்பட்ட அரசியல் காரணங்கள் அல்ல. தேர்தல் அரசியல் காரணங்கள் அல்ல. அம்பேத்கரின் சமத்துவ கொள்கைகளை ஏற்று கொண்ட சமத்துவ இயக்கமாக பா.ஜ., இல்லை. அம்பேத்கரின் மதசார்பின்மைக்கு நேர் எதிரான இயக்கம் பா.ஜ.,அதனால் பாஜ.,வை விமர்சிக்கிறோம். தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் பா.ஜ.,வை எதிர்க்கிறோம் என்றால், தேர்தல் அரசியலில் கூட்டணி அடிப்படையில் அமைந்துவிடும். கருத்தியல் அடிப்படையில் மதசார்பின்மைக்கு பா.ஜ., எதிரானது என்பதால், விமர்சனம். வேறு எந்த தனிநபர் விமர்சனமோ, தனிப்பட்ட அரசியல் காரணங்களோ கிடையாது. இந்தியாவில் மதசார்பின்மைக்கு நேர் எதிரான இயக்கமாக பா.ஜ., உள்ளதால், நாங்கள் கருத்தியல் அடிப்படையில் எதிர்க்கிறோம்.அ.தி.மு.க.,வை நான் விமர்சிக்கவில்லை. எந்த காழ்ப்பும் இல்லை. அவர்கள் வலுவாக உள்ள போது, கூட்டணி ஆட்சி என அமித்ஷா சொல்வது என்றால், அ.தி.மு.க.,வை எவ்வளவு பலவீனமாக கருதுகிறார்கள்?எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காத்த இயக்கத்தை துச்சமாக மதிக்கிறார்கள். சாதாரணமாக பேசுகிறார்கள். அவர்களிடம் கருத்து கேட்காமல்,ஒப்புதல் இல்லாமல் கூட்டணி ஆட்சி என்றால், அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்துவோம் என்று தானே பா.ஜ., சொல்கிறது. அது தானே அதன் பொருள். அப்படியென்றால் அவர்கள் கோபம் யார் மீது வர வேண்டும். யாரை கேட்டு அப்படி சொல்கிறீர்கள் என கேட்க வேண்டும்?அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களை பலவீனப்படுத்த பார்க்கிறார்கள். நீங்கள் சொல்லாமலேயே கூட்டணி ஆட்சி என சொல்வதன் மூலம் உங்களை குறைத்து மதிப்பிடுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். அவர்கள் என் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம். அமைதியாக இருந்திருக்க வேண்டும். என்னை விமர்சிக்கிறார்கள் என்றால், தன் தலையிலேயே மண் அள்ளிப்போட்டு கொண்டதாக தான் பார்க்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது சந்தேகத்தை எழுப்பினால் தி.மு.க., கூட்டணியில் குழப்பம் ஏற்படும். விரிசல் ஏற்படுத்தலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கட்சி வளரக்கூடாது என நினைத்தவர்கள், 4 அல்லது 6 தொகுதி மட்டும் ஏன் கேட்கிறீர்கள் என்கிறார்கள். இதற்கு எங்களின் வளர்ச்சி, நலன் அவர்களின் நோக்கம் அல்ல.எங்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு வெறுப்பு வரும் என எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் தி.மு.க., மட்டுமே பாதுகாப்பு அரண் என பார்க்கவில்லை. மதசார்பற்ற கூட்டணியை உருவாக்கியதில் ஒவ்வொரு கட்சிக்கும் பங்கு உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பங்கு உண்டு. ஆனால், தி.மு.க.,வுக்காக நான் பேசுகிறேன் என திசைதிருப்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

S.V.Srinivasan
ஜூலை 22, 2025 14:57

அது சரி. உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத கவலையெல்லாம். டீம்க கூட்டணியில் 2 சீட் கிடைக்குமா பாருங்க. ஊர் கவலையெல்லாம் எதுக்கு. ஆடு நினையுதேன்னு ஓநாய் அழுவுதாம், அத மாதிரி இருக்கு.


Indhuindian
ஜூலை 20, 2025 05:49

எப்பா ஆடு நனையாதுப்பா ஆடு நனையுது ஒரே அஷுகயா வருதப்பா வருதப்பா


M S RAGHUNATHAN
ஜூலை 19, 2025 09:14

இவர் ஏன் வருத்தப் படவேண்டும். அழவேண்டும். முதலில் இவர் கட்சியை திமுக கபளிகரம் செய்யாமல் பார்த்துக் கொள்ளட்டும். இவர் துணிவு இருந்தால் ஸ்டாலினிடம் குறைந்தது 20 தொகுதிகள் கேட்டு பெறட்டும். இவர் ஒரு hi tech உடன் பிறப்பு. சம்பளம் லக்ஷ கணக்கில். ஒரு வேளை இவர் திமுக கூட்டணியில் இருந்து விலகினால் இப்போது இருக்கும்.ஒரு MLA கூட இவருடன் வெளியே வரமாட்டார்கள்.


Nagarajan D
ஜூலை 18, 2025 12:33

பிளாஸ்டிக் நாற்காலியில் உன்னை உக்காரவைக்கிறப்பவே இப்படி பேசிக்கிட்டு தெரியிற..


Narayanan
ஜூலை 18, 2025 11:08

திமுகவே தங்களது கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தவீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்துகின்றனர் . இதன் முடிவில் 4 கோடி உறுப்பினர் சேர்ந்துவிட்டால் அனைத்து கூட்டணி கட்சிகளும் தனித்து விடப்பட்டு 234 தொகுதிகளிலும் திமுக தனியாக நிற்க திட்டமிடுவது தெரியாமல் திருமால்வளவன் பேசிக்கொண்டு இருக்கிறார் .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 18, 2025 10:55

சாதிக்கட்சியாக இருப்பதாலும், கட்டப்பஞ்சாயத்து செய்தே சம்பாதித்துப் பழக்கமானதாலும் கட்சியின் செல்வாக்கு சாதி ஓட்டுக்களைத்தாண்டி வளரவில்லை .... அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருப்பதால் அங்கும் போக முடியாது ..... திமுகவுடனேயே சேர்ந்து தோற்கவேண்டி வருமோ என்கிற பீலிங்கு திருமாவுக்கு .... அதனால்தான் இப்படிப்பட்ட பேச்சுக்கள் ......


Mario
ஜூலை 17, 2025 20:13

ரூ.4 கோடி விவகாரம்.. நயினார் நாகேந்திரனுக்கு உதவி.. சிக்கிய 3 பாஜக தலைகள்.. ஆதாரத்துடன் சிபிசிஐடி


தாமரை மலர்கிறது
ஜூலை 17, 2025 18:59

பிஜேபியுடன் கூட்டணியில் இருப்பதே, அதிமுகவிற்கு பாதுகாப்பு என்று எடப்பாடி நினைக்கிறார். இல்லையெனில் எடப்பாடி மற்றும் அவரது முன்னாள் அமைச்சர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். குருமா ஒன்றும்புரியாமல் உளறுகிறார்.


panneer selvam
ஜூலை 17, 2025 16:49

Thiruma ji does not know anything about teaching of Ambedkar . Ambedkar demanded Hindi is the only unifying language in India , I do not know even Thiruma ji or his cronies know about it . Nowadays Thiruma ji is so interested about AIADMK . Even day and night , he speaks for the wellness of AIADMK . It is better he could dissolve his eism party and join secularist AIADMK


V Ramanathan
ஜூலை 17, 2025 21:29

Not Hindi. He said that Sanskrit should be the national language.


Ramalingam Shanmugam
ஜூலை 17, 2025 16:38

குருமா என்ன சௌக்கியமா பழைய சோறு கேட்டில் போட்டார்களா பிளாஸ்டிக் chair போட்டார்களா கோட் என்னாச்சு சரக்கு மிடுக்கு காட்ட போகலையா


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 18, 2025 13:29

விடியல் முன்னாடி இனிமே இவனால் ஆட்டிக்க முடியாது .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை