பொறுப்பை உணர்ந்து பா.ஜ.,வினர் செயல்படுங்கள்
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப் போகும் தோழமை கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் நன்றி. தமிழகத்தின் நலன் கருதி, வலிமைமிக்க கட்சிகள் ஒரு குடையின் கீழ் திரண்டு நிற்கும்போது, தங்களின் பொறுப்பை உணர்ந்து பா.ஜ.,வினர் செயலாற்ற வேண்டும். தமிழகத்தை தீயசக்தி தி.மு.க.,விடம் இருந்து மீட்பதற்கு, பிரதமர் மோடி காட்டிய வழியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்களான நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தி.மு.க.,வை விரட்டி அடிப்பதை மட்டும், ஒரே குறிக்கோளாக கொண்டு செயலாற்ற வேண்டும். தோளோடு தோளாக நின்று அனைவரும் ஒற்றுமையுடன் செயலாற்றுவோம். -- நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ., .