உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தேனி செல்ல வேண்டும்; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தேனி செல்ல வேண்டும்; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதேனிக்கு முதல்வர் ஸ்டாலின் விரைந்துச் சென்று போர்க்கால அடிப்படையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக மக்களை வைத்திட முகாம்கள் அமைக்க வேண்டும்,' என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை; எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறுவதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3oyw72q5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரலாறு காணாத தொடர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இது ஒரு விதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவ மழை துவங்கும் முன்பே, கால்வாய்களைத் தூர்வாரி, நீர்நிலைகளைப் பேணி இருந்தால் இது போன்றதொரு பேரிடர் ஏற்பட்டிருக்குமா? பருவ மழையை முன்கூட்டியே கணித்து உரிய முன்னேற்பாடுகளைச் செய்து, மக்களை எச்சரித்து இருந்தால், இது போன்ற சேதம் தான் ஏற்பட்டிருக்குமா?முல்லைப் பெரியாறு அணையில் நான்கு நாட்களுக்கு முன்பு வரை 1,000 கனஅடி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்று இரவு மட்டும் தமிழக நீர்வளத்துறையால் 7,163 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருப்பது தான் வெள்ளத்திற்கான காரணமோ என்ற சந்தேகமும் எழுகிறது.மொத்தத்தில் திமுக அரசின் அலட்சியத்தால் நள்ளிரவில் தங்கள் வீடுகளை இழந்தும், கால்நடைகளைப் பறிகொடுத்தும், வயல்வெளிகள் சேதமாகியும் வாழ்வாதாரமின்றி மக்கள் தவிக்கும் போது, மீட்புப்பணியைத் துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருக்கிறது விளம்பர மாடல் அரசு.முதல்வர் ஸ்டாலின் உடனடியாகத் தேனி விரைந்துச் சென்று போர்க்கால அடிப்படையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக மக்களை வைத்திட முகாம்கள் அமைக்க வேண்டும். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கி கைகொடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

pakalavan
அக் 19, 2025 19:54

ஏன் பிரதமர் வர மாட்டாரா ?


duruvasar
அக் 19, 2025 19:34

ஸ்டாலின் ஐயாவுக்கு அறிக்கைகளை விட கடிதம் போடுவதுதான் பிடிக்கும். கடிதம் போடுங்கள்.


C.SRIRAM
அக் 19, 2025 20:33

தனக்குத்தானே கடிதம் ?. செய்தாலும் செய்வார் ?. விளம்பர மாடல் .


Vasan
அக் 19, 2025 19:25

நயினார் அவர்கள் சிறிதும் கால தாமதம் செய்யாமல், மத்தியில் ஆளும் பிஜேபி ஒன்றிய அரசிற்கு கட்டளையிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தேனி மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க ஆணையிட வேண்டும். நயினாரை போல் எனக்கும் மனது பதபதைக்கிறது.


rama adhavan
அக் 19, 2025 20:11

அப்போ இங்கு எதற்கு ஒரு ஆட்சி தனியாக, அறிக்கை விட மற்றும் தீர்மானம் நிறைவேற்றவா?


rama adhavan
அக் 19, 2025 19:04

அவர்கள் கணக்குப்படி தேனி கரூர் அல்ல உனே செல்ல.


Bala C
அக் 19, 2025 18:49

மோடி தமிழ்நாடட்டுல/ சென்னை/ கடலூர்ல மழை வந்தப்ப உடனே வந்துட்டாரு.


D.Ambujavalli
அக் 19, 2025 18:20

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை வஞ்சகமில்லாமல் பெய்தாலும், வருமுன் காக்கும் திட்டங்கள் எதுவும் இல்லாமலோ , அரைகுறையாக செயல்பட்டோ சேதம் ஏற்படுவதும், ‘வரலாறு காணாத மழை, நூற்றாண்டு கண்டிராத மழை’ என்று பல்லவி மட்டுமே பாடுவதுதான் அரசின் சேயல்பாடாக உள்ளது


Krishnamurthy Venkatesan
அக் 19, 2025 19:37

இது எந்த கட்சி ஆண்டாளும். பருவ மழையினை சரியாக கையாள்வதில்லை என்பதே உண்மை.


பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளா .
அக் 19, 2025 17:11

பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள 7160 கன அடி நீர் தமிழகத்திற்கு வராது. கேரளாவில் உள்ள இடுக்கி அணைக்கு தான செல்லும்.


அப்பாவி
அக் 19, 2025 16:54

போகலேன்னா போகலை போகலைம்பாங்க. போனா, நாங்க சொல்லித்தான் போனோம்பாங்க.


vivek
அக் 19, 2025 18:01

அப்பாவி அப்பாவிதனமா கருத்து போட்டாலும் அப்பாவியை அப்பாவி என்று யாரும் நினைக்கவேண்டாம்


rama adhavan
அக் 19, 2025 20:15

கரூருக்கு உடன் விமானத்தில் யாரும் சொல்வதற்கு முன் சென்றது போல் தேனிக்கும் சென்று இருக்கலாமே அப்பாவி


sankaranarayanan
அக் 19, 2025 16:52

முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தேனி செல்ல வேண்டும்


Vasan
அக் 19, 2025 19:28

அதற்கு காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும்.


raja
அக் 19, 2025 16:46

இந்த தேனீ மக்கள் எப்போதும் அதிமுகவுக்கு தான் ஒட்டு போட்டு ஜெயிக்க வைப்பதால் திருட்டு திராவிட மாடல் ஆட்சி நடத்தும் எங்களுக்கு ஒரு புரோஜனமும் இல்லையே ஆகையால் எனது கழக உடன்பிறப்புகல் செல்வதே நான் சென்று பார்ப்பதற்கு சமம்...


முக்கிய வீடியோ