உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு

பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழலை கண்டித்து பா.ஜ., நடத்தும் போராட்டத்தை வரவேற்பதாக, விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தில் பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்துக்கு புறப்பட்டு சென்ற மாநில தலைவர் அண்ணாமலையும் கைது செய்யப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7s8mcw37&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் கூறியதாவது: சட்டம் ஒழுங்கு என்ற அடிப்படையிலே அந்த நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு இருக்கலாம். ஆனால் இந்த போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். மதுபானம் முற்றிலுமாக தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். கடைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. எங்கள் நிலைப்பாட்டுக்காக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக, அரசுக்கு நெருக்கடி கொடுக்கிற ஒரு உத்தியாக இதை கையாள்கிறார்கள் என்றால், எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.பா.ஜ., ஆளும் மாநிலங்களில், மது ஒழிப்பு கொள்கைகளை அவர்கள் நடைமுறைப் படுத்துகிறார்களா என்ற கேள்வியும் இன்னொரு புறம் எழுகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களிலும் மது ஒழிப்பை நடைமுறைப் படுத்தினால் நாம் முழு மனதுடன் வரவேற்கலாம். பாராட்டலாம். தேர்தல் வாக்குறுதி படி மதுவிலக்கு கொள்கையில் தி.மு.க., அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். இவ்வாறு திருமாளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

தாமரை மலர்கிறது
மார் 18, 2025 01:43

பிற மாநிலங்களில் தலித் தலைவர்கள் பிஜேபி அணியில் இருப்பதை போன்று திருமாவும் பிஜேபி அணிக்கு தாவ தயாராகிவிட்டார். விரைவில் ஸ்டாலினுக்கு டாடா காட்டிவிட்டு பிஜேபி அணியில் இணைவார்.


K.Ramakrishnan
மார் 17, 2025 20:40

இதெல்லாம் ஒரு நாடகம். அரசிடம் காரியம் ஆக வேண்டும் என்றால் இப்படித்தான் செய்வது வழக்கம். எம்.ஜி.ஆர். காலத்திலேயேஇப்படித்தான் இருந்தது. அப்போது தனிக்கட்சிநடத்திய ஒரு தலைவர்,இப்போதும் இருக்கிறார்மாதாந்திரம் வரவேண்டியது வரவில்லை என்றால்ஒரு அறிக்கை விடுவார்.உடனே எம்.ஜி.ஆர்., அவருக்குசேர வேண்டியது சேரலையா? என்று தான்கேட்பார். இதெல்லாம் ஒரு டெக்னிக்.


Appa V
மார் 17, 2025 19:53

லிமிட்டா தான் பேசுவார் ..இல்லாட்டி அந்த அம்மணியை அழைத்து வந்து பெங்களூரு பாணியில் பேட்டி கொடுக்க வைப்பாங்க IT விங் ,


B MAADHAVAN
மார் 17, 2025 19:09

இவர் இந்த மாதிரி பேசுகிறார் என்றாலே ஒருவேளை, உண்மையில் அறிவார்ந்து பேசுகிறாரா அல்லது அறிவாலய பிரியாணிக்காக பேசுகிறாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.


Asagh busagh
மார் 17, 2025 18:44

சட்டசபை தேர்தல் நெருங்குது. பெட்டி எல்லா திசையில இருந்தும் வரலாம். வர பெட்டிய வெயிட்டாக்க எல்லாருக்கும் ஆதரவா பேசிவச்சிகிறாரு. இதல்லெம் ஒரு பிழைப்பா?


Venkatesan Ramasamay
மார் 17, 2025 18:27

சரி ... பேசினது போதும் போப்ப்பா ... அங்க பிரியாணி ஆறிடப்போகுது...


Mr Krish Tamilnadu
மார் 17, 2025 16:56

தமிழகம் இந்தியாவில் எதில் முதலிடம் வருகின்றதோ இல்லையோ , ஊழலில் முதலிடம் வந்து விடும். நம்பிக்கை வந்து விட்டது.பிறகு எப்படி மத்திய அரசு உங்களை நம்பி நிதிகளை விடுவிக்கும். பெரிய கட்சிகள் கூட்டணி பேரம்-தில் சிறிய கட்சிகள் இவ்வளவு தேர்தல் செலவு நிதி தாருங்கள் என்கிறது என்கிறார்கள். பரிசுத்தமான, மக்கள் தொண்டு உள்ளம் நிறைந்த அரசியல்வாதிகள் தமிழகத்தில் இல்லையோ? சுற்றுலா மேம்பாடு, காவிரியில் புது அணை கட்டி நீர்வள மேம்பாடு, தமிழக அரசியல்வாதிகளின் தனி பட்ட நிதி மேம்பாடு நின்று, மாநிலம் வளர்ச்சி பாதையில் எப்போது செல்லும்?.


Balasubramaniyan Dhanasekara dhandapani
மார் 17, 2025 16:54

திருமா அன்னே தி மு க வை எதிர்த்து


vijayaraj
மார் 17, 2025 16:41

ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்.


Prabhakar Krishnamurthy
மார் 17, 2025 16:34

திரு மா கருத்தை யாரும் பொருட் படுத்துவதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை