மேலும் செய்திகள்
காங்கிரசார் புகார்களை கண்டுக்காத போலீசார்!
03-Oct-2024
திருச்சி:''தி.மு.க.,வின் அயலக அணியினர், இரண்டு மாநிலங்கள் இல்லாமல், இந்திய வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். இதற்கு, தமிழக முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்று தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ராஜா தெரிவித்தார். திருச்சியில், நேற்று முன்தினம் மாலை, பா.ஜ., மண்டலங்களுக்கான உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சியும், உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. பின், ராஜா அளித்த பேட்டி: தி.மு.க.,வின் அயலக அணி தேசவிரோத செயலாற்றும் அமைப்பாக உள்ளது. அந்த அணியினர் இரண்டு மாநிலங்கள் இல்லாமல், இந்திய வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். இதற்கு, தமிழக முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். திருமாவளவன் பட்டியல் சமுதாய மக்களுக்கான தலைவர் இல்லை. ஹிந்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் நோக்கில், மதமாற்ற தலைவராக செயல்பட்டு வருகிறார். திருமாவளவன் மற்றும் செல்வப்பெருந்தகை போன்றவர்களின் பேச்சு, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு உள்ளதை காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
03-Oct-2024