உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடநாட்டில் தெருவில் நின்றபோது ஜெயலலிதா என்று சொல்லி இருப்பீர்களா; விஜயை விளாசிய சரத்குமார்

கோடநாட்டில் தெருவில் நின்றபோது ஜெயலலிதா என்று சொல்லி இருப்பீர்களா; விஜயை விளாசிய சரத்குமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: கோடநாட்டில் தெருவில் நின்ற போது, ஜெயலலிதா என்று பெயரை சொல்லி இருப்பீர்களா? என்று தவெக தலைவர் நடிகர் விஜயை, பாஜவைச் சேர்ந்தவரும், நடிகருமான சரத்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.மதுரையில் தவெக மாநாட்டில் பேசிய தவெக தலைவர் நடிகர் விஜய், பாஜ குறித்தும், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரையும் விமர்சித்து இருந்தார். அவரின் பேச்சுக்கு பாஜவினரும், திமுகவினரும் கடும் எதிர்வினையாக்கி வருகின்றனர்.இந் நிலையில் கள்ளக்குறிச்சியில் தமது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், அதிமுக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பெயர் சொல்லி அழைத்திருப்பீர்களா என்று சரமாரியாக விமர்சித்துள்ளார்.விழாவில் நடிகர் சரத்குமார் பேசியதாவது; ஊழலற்ற அரசாங்கம், வெளிப்படைத்தன்மையான ஆட்சியை நடத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் பிரதமர் மோடி. அப்படிப்பட்ட ஒருவரை அண்மையில் கத்துக்குட்டியான ஒருவர்(நடிகர் விஜயை குறிப்பிடுகிறார்) மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைக்கிறார்.அப்படி அழைப்பதில் ஒன்றும் தவறில்லை. நீங்கள் (நடிகர் விஜய்) கோடநாட்டிலே தெருவிலே நின்று கொண்டு இருக்கும் போது மிஸ். ஜெயலலிதா ஜெயராம் என்று சொல்லியிருப்பீர்களா? என்ன தவறு என்று கேட்கிறீர்கள்? இன்றைக்கு மிஸ். ஜெயலலிதா ஜெயராம் என்று சுட்டிக்காட்டி சொல்லி பாருங்கள்.. சொல்லி பாருங்களேன். சிங்கம் வேட்டைக்கு மட்டும் போகுமா? அப்புறம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுமா? சிங்கம்னா சிங்கமாக இருக்கணும். தூங்குகின்ற சிங்கமா இருக்கக்கூடாது.இதை எதற்காக சொல்கிறேன் என்றால், தன்மையற்று பேசியதால் நான் பேசுகிறேன். இல்லைனா நான் அவரை (நடிகர் விஜய்) பற்றி பேசலை. நமது முதல்வரை தாய்மாமா என்று கூப்பிடுவேன், அங்கிள் என்று சொல்வேன் என்று சொல்கிறார்.நீங்க என்னை அங்கிள்னு, தாத்தான்னு கூப்பிடுங்க கவலைப்படலை. ஆனால் தரம் என்று ஒன்று இருக்கிறது. பிரதமரை அவரது பெயரை சொல்லி அழைக்கக்கூடாது. முதல்வரையும் பெயர் சொல்லி கூப்பிடக்கூடாது. ஏன் என்றால் அவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்.நீங்கள் அந்த மனிதருக்கு மரியாதை கொடுக்கிறீர்களோ இல்லையோ அந்த பதவிக்கு மரியாதை கொடுத்தாக வேண்டும். அந்த தரத்தை கற்றுக் கொள்ளுங்கள் விஜய் அவர்களே. நல்ல கருத்தை சொல்லும்போது ஏன் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்கிறீர்கள். தைரியம் என்றால் என்னிடம் வந்து பேசி பாருங்கள்.இவ்வாறு சரத்குமார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Prathab
ஆக 26, 2025 14:14

திரு. விஜயகாந்த் செய்தது போல, திரு. விஜய் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க மே 2026 வரை காத்திருப்போம். இப்போது, ​​நாம் என்ன பேசினாலும், அது நமக்கு உதவாது, நமக்குள் வெறுப்பை மட்டுமே உருவாக்கும். காத்திருப்போம்.


Padmasridharan
ஆக 26, 2025 12:01

ஜெயலலிதா ஒரு பெண்ணதிகாரி. இரட்டை இலையை காத்த MGR ஐ வீழ வைத்துவிட்டார்கள். மக்கள் இரண்டு Ds ஐயும் எதிர்க்க தனியாள் இல்லையென்று வோட்டு போட்டார்கள். அதுவும் NOTA வுக்கு. எந்த கட்சிக்குமே செல்லாத மக்களின் நேரத்தை வீணடிக்கும் இந்த choice பற்றி நிறைய பேருக்கு தெரியாமலேயே அழுத்தி விட்டிருக்கின்றனர். தேவையில்லாத கட்சிகளும் இந்த NOTA வயும் எடுத்தபின்னர் தெரியும் உண்மையான உழைத்த வெற்றியாளர் யாரென்று. Mr. & Uncle கெட்ட வார்த்தைகள் அல்ல, பூ இப்பொழுதுதான் மலருகிறது. யானை பலத்தை சேர்க்க தமிழ் நடிகர்கள் ஒன்றாக இணைந்து கேப்டன் ஆக செயல்படுங்கள் அன்பான SSir


பாரதன்
ஆக 25, 2025 21:09

நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்... சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான்... உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளை பிரதேசம்னா அது சினிமா ஒன்னுதான். பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு... அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான்... அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காதே... அது ரொம்ப அசிங்கம்... அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே... நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்... அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே... அசிங்கம் அவமானம் - நடிகவேள் எம்ஆர் ராதா


Easwar Kamal
ஆக 25, 2025 18:13

ஜெயா இருந்து இருந்தால் விஜய் என்ன அங்கிள் ஸ்டாலின் கூட வீட்டில் அமைதியாக வாக்கிங் போய் கொண்டு இருந்து இருப்பர். மவன்காரன் வழக்கம்போல படம் டிஸ்ட்ரிபியூஷன் பண்ணி கொண்டு irudhrpapala எல்லாம் காலம் செய்த மாற்றம்


venugopal s
ஆக 25, 2025 18:41

உங்கள் ஆளுநர் மற்றும் மோடி,அமித்ஷா போன்றவர்களை மட்டும் ஜெயலலிதா சும்மா விட்டு வைத்து இருப்பாரோ?


sekar ng
ஆக 25, 2025 16:58

தனது திட்ட கொள்கையை கூறாமல் தரக்குறைவாக பேசி கைத்தட்டலுக்கு ஆசைபடும் செல்வந்த பெங்களாவிற்குள் ஒளிந்து கொள்ளும் சிங்கம்


RAMESH
ஆக 25, 2025 15:31

அருமையான பதிவு . நன்றி


Barakat Ali
ஆக 25, 2025 13:52

அதிமுக-பாஜக ஓட்டுக்களை பிரிக்கத்தான் இவனை எங்க துக்ளக்கார் இறக்குனாரு .... போற போக்கை பார்த்தா இவனுங்க ஓட்டுலதான் ஓட்டை விழும் போல .....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 25, 2025 13:29

டீம்காவுக்கும், எங்களுக்கும்தான் போட்டி ன்னு அவன் சொன்ன நோக்கம் நிறைவேறிடுச்சு ...... ஏன்னா பாஜக அவனுக்கு தேவைக்கும் அதிகமா முக்கியத்துவம் கொடுக்குது ......


தஞ்சை மன்னர்
ஆக 25, 2025 13:09

எங்க mr ப்ரெசிடெண்ட் mr ப்ரெசிடெண்ட் கூப்பிடமா வெங்காயம்னா சொல்லமுடியும் நீ குனிஞ்சி உன் பொண்ண காப்பாத்தவேண்டி காலை போய் விழுந்தாய் என்பதற்க்காக எல்லோரும் அப்படி இருக்கமுடியுமா நீ தொண்டர்களின் காச தின்று விட்டு கொழுத்து போனதுக்கு இவரை போய் ஏன் திட்டுகிறாய்


Anonymous
ஆக 25, 2025 15:21

நம்ம ஜனாதிபதியை Mr.President அப்டின்னு கூப்பிட்டா , பிரச்சனை இல்லை, Mrs. திரௌபதி முருமு அவர்களே அப்டின்னு சொன்ன , அதுவும் ஒரு கட்சியின் தலைவரா, மேடை போட்டு பேசும்போது, கூப்பிட்ட பிரச்சனை தான், அந்த ஜனாதிபதி பதவிக்கு ஒரு கண்ணியம், மரியாதை இருக்கு, இந்த அடிப்படை விஷயத்தைக் கூட புரிஞ்சுக்க முடியாம, திரு. சரத் குமாரை எகிறுறீங்க, இதிலேயே, விஜய் ரசிகர் கூட்டத்தின் தராதரத்தை, வெளிப்படுத்தி விட்டீர்கள், நஷ்டம் விஜய்க்கு தான், சரத் குமாருக்கு அல்ல, பேர்ல மன்னர் வச்சு என்ன பிரயோஜனம்?


Mani
ஆக 25, 2025 12:29

திமிர் பிடித்த விசெய்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை