உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குளறுபடி இன்றி மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ஜ., ஆதரவு

குளறுபடி இன்றி மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ஜ., ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை பா.ஜ., ஆதரித்துள்ளது. மேலும், மாநில அரசே எந்த குளறுபடியும் இன்றி ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் பா.ஜ., தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=98myxmwg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து விவாதம் நடைபெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பா.ஜ.,வும் ஆதரவு தெரிவித்துள்ளது. விவாதத்தின்போது பா.ஜ., எம்எல்ஏ., நயினார் நாகேந்திரன் பேசியதாவது: அரசியலமைப்புச் சட்டம் 208(3) அ-வின்படி மாநில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது என முதல்வர் கூறியுள்ளர். பீஹாரில் மாநில அரசு நடத்திய இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் தடை செய்ய காரணம், அங்கு கணக்கெடுப்பில் குளறுபடி, தவறு இருந்தது தான். 2012ல் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மாநில அரசுதான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறினார். முதல்வரின் தீர்மானத்தை பா.ஜ., ஆதரிக்கிறது. ஆனால் மாநில அரசே எந்த குளறுபடியும் இன்றி ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 22:42

சபாநாயகர் ஓம் பிர்லா குறித்து திருமாவளவன் "ஆளுங்கட்சிக்கு ஒரு சார்பாகவும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வகையாகவும் அணுகியிருக்கிறீர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. " இதே போல தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு வலியுறுத்துவாரா ??


Ramesh Sargam
ஜூன் 26, 2024 22:25

குளறுபடி இல்லாமல் கணக்கெடுப்பை எடுக்க சாத்தியம் இல்லவே இல்லை.


saravan
ஜூன் 26, 2024 19:00

எந்த சாதி ... அப்படியானால் பெரியார் சாதியை ஒழிக்கவில்லையா? அல்லது ஒழித்த சாதியின் பெயரை சொல்லுங்கள் எந்த சாதியா இருந்தா உங்களுக்கென்ன... வருங்கால தலைமுறைக்கு சாதியே வேண்டாம்...பொருளாதாரத்தில் பின் தங்கியவனுக்கு தாருங்கள் ஒதுக்கீடு


GMM
ஜூன் 26, 2024 17:53

தாத்தா பாட்டி ஒரு சாதி. அப்பா அம்மா இரு சாதி. மகன் மருமகள் இரு மதம். குளறுபடி இல்லாமல் எப்படி சாதி பெயர் பதிவு பண்ணுவது. சாதி கணக்கு எடுத்து இட ஒதுக்கீடு எப்படி பங்கு கொள்வது.


Raj Kumar
ஜூன் 26, 2024 17:10

ஜாதி வாரி கணக்கெடுப்பை வைத்து தான் இட ஒதுக்கீடு எதிர்காலத்தில் அமல்படுத்தப்படும் என நினைக்க தோன்றுகிறது


பிரேம்ஜி
ஜூன் 26, 2024 16:59

நயினாரின் நான்கு கோடி என்னாச்சு? அனாமத்தாக போய்விட்டதா?


பேசும் தமிழன்
ஜூன் 26, 2024 16:21

அப்போ திராவிட மாடல்... ஜாதியை ஒழித்து விட்டார்கள் என்று கூறியது எல்லாம் பொய்யா கோபால் ???


என்றும் இந்தியன்
ஜூன் 26, 2024 16:21

ஜாதிவாரி கணக்கெடுப்பு திருட்டு திராவிடம் எடுத்தால் எப்படி இருக்கும். உனது பெயர் என்ன?? விஜய் நீ என்ன ஜாதி நான் கவுண்டன். இப்படி கணக்கெடுப்பு நடத்தும். விஜய் உண்மையான பெயர் ஜோசப் விஜய் மதம் கிறித்துவ மதம். அப்போ எப்படி கவுண்டர் ஜாதி ஆக முடியும். இப்படித்தான் நடக்கும் திருட்டு திராவிடம் கிறித்துவ முஸ்லிம் மதமாக இருந்தாலும் அவர்கள் இந்த ஜாதிக்காரர்கள் தான் என்று மதத்தை மறைத்து தட்டி கணக்கெடுப்பு கொடுக்கும்.


Raa
ஜூன் 26, 2024 16:21

குளறுபடி இல்லாமல் மாநிலத்துக்கு எதுவுமே பண்ணத்தெரியாது. குளறுபடியை வேண்டுமானால் குளறுபடி இல்லாமல் பண்ணத்தெரியும்.


பிரேம்ஜி
ஜூன் 26, 2024 16:57

சூப்பர் கமெண்ட்


Sivakumar
ஜூன் 26, 2024 18:41

NEET , பணமதிப்பிழப்பு, விவசாய கொள்முதல் கொள்கை இப்படி எல்லாவிதத்திலும் குளறுபடி செய்து சொதப்பியது ஒன்றிய அரசு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை