உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விலை பட்டியலை வெளியிட ஆவினுக்கு பா.ஜ., வலியுறுத்தல்

விலை பட்டியலை வெளியிட ஆவினுக்கு பா.ஜ., வலியுறுத்தல்

சென்னை: தமிழக பா.ஜ., அறிக்கை: ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்திற்கு பின், தி.மு.க., அரசு, ஆவின் பால் பொருட்களின் விலையை குறைக்கவில்லை. அவை இன்னும், அதே எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விலையிலேயே விற்கப்பட்டு வருகின்றன. விழாக்கால தள்ளுபடி என, மக்களை ஏமாற்றி, மேலும் திசை திருப்ப வேண்டாம். மீண்டும் கேட்கிறோம். பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தின்படி, ஆவின் பால் பொருட்களின் விலை குறைக்கப்படுமா, குறைக்கப்படாதா? இதற்கு, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அல்லது ஆவின் நிறுவனமோ, அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையையும், இம்மாதம், 22ம் தேதிக்கு பின் மாற்றி அமைக்கப்பட்ட விலை பட்டியலையும் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vbs manian
செப் 25, 2025 10:50

பால் ஜி எஸ் டி வலையிலிருந்து தப்பி விட்டதா.


Vasan
செப் 25, 2025 10:13

ஆவின் 1 கிலோ நெய் விலை 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாமே ? அது தமிழ்நாடு அரசின் பண்டிகைக்கால தள்ளுபடி என்று சொல்லப்படுகிறதாமே ? தமிழக முதல்வருக்கு மிக்க நன்றி.


duruvasar
செப் 25, 2025 07:29

நீங்க கிஸ்டீ வரிக்குறிப்புக்கு முன் என்ன விலை இப்போது எவ்வளவுக்கு விற்க வேண்டும் என பட்டியலிட்ட துண்டு பிரசுரத்தை மக்களிடையே கொடுக்கலாமே. இந்த அறிக்கை அரசியலை மூட்டை கட்டுங்கள் .


புதிய வீடியோ