உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ஜ.,வின் அடுத்த இலக்கு தமிழகமே: நாகேந்திரன்

 பா.ஜ.,வின் அடுத்த இலக்கு தமிழகமே: நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை: தேர்தலில் வெற்றி பெற்றால், தேர்தல் கமிஷனை கொண்டாடுவதும், தோல்வி அடையும்போது, அதே தேர்தல் கமிஷனை சாடுவதும்தான், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாடிக்கை. பா.ஜ., எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம், தமிழகத்தை நோக்கியே. 'ஆடத்தெரியாதவன் தெரு கோணல்' என்று சொல்லும் கதையாக, மக்களின் ஆதரவை பெற முடியாதவர்கள் தான், தேர்தல் கமிஷனின் நேர்மையை குறை சொல்வர். தேர்தல் கமிஷன் நடத்திய, தேர்தல் வாயிலாக கிடைத்த, எம்.பி., - எல்.எல்.ஏ., பதவிகளில் அமர்ந்து, அதே தேர்தல் கமிஷன் மீது, சந்தேக கற்களை வீசும் ஆட்கள், செக்கிற்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை