உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.வின் கருவி விஜய் திருமாவளவன் கடும் தாக்கு

பா.ஜ.வின் கருவி விஜய் திருமாவளவன் கடும் தாக்கு

சென்னை: 'பா.ஜ.,வின் கருவியாக, விஜய் செயல்படுகிறார்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை: கரூரில் நடந்த கொடூரம் நாட்டை உலுக்கிய பேரவலமாகும். 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது, ஒருங்கிணைத்தவர்களின் பொறுப்பில்லாத போக்குகளால் நேர்ந்த பேரிடராகும். இந்த சம்பவத்தில், முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட அதிவிரைவான நடவடிக்கைகளே, பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுத்தன. ஆனால், விஜய், காணொலி வழியே வெளியிட்ட பதிவில், முதல்வர் மீது பழி சுமத்தும் வகையில் பேசியிருப்பது, அவரது அரசியல் நேர்மையை, கேள்விக்குள்ளாக்கி உள்ளது. நடந்த பெருந்துயரத்துக்காக, அவர் வருந்துவதாக தெரியவில்லை. இந்த உயிரிழப்புகளை வைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே நோக்கமாக கொண்டிருக்கிறார். இந்தச் சம்பவம், வெளிப்புறத்தில் இருந்து யாரோ துாண்டி விட்டதால் அரங்கேறியது என்ற, தவறான கருத்தை உருவாக்கி, பாதிப்படைந்த மக்களை, மீண்டும் ஒரு மாயைக்குள் வீழ்த்திட, விஜய் தரப்பினர் முயற்சிக்கின்றனர். இதிலிருந்து, விஜய்க்கு தவறான வழிகாட்டுதலையும், தி.மு.க.,வுக்கு எதிரான வெறுப்பு அரசியலை போதிப்பதையும், துணிந்து செய்பவர்களின் கோரப்பிடியில், விஜய் சிக்கியுள்ளார் என்றே உணர முடிகிறது. விஜய், பா.ஜ.,வின் கருவி தான். தமிழக மக்கள் இந்த சக்திகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, வடமாநிலங்களில் காட்டிய, அரசியல் சூழச்சி போன்ற கைவரிசையை, தமிழகத்திலும் செய்து காட்ட முயற்சிக்கும், சங்பரிவாரிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் அரசியல் சதிகளை முறியடிக்க, அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் திருமா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
அக் 03, 2025 09:58

திருமாவளவன் திமுகவின் கருவி, எல்லாம். அதை மறந்து மற்றவர்களிடம் குற்றம் காண்கிறார்.


Mr Krish Tamilnadu
அக் 02, 2025 12:38

ஊகங்களை விடுங்கள். த.வெ.க. எங்கள் கூட்டங்கள் இப்படி தான் இருக்கும், இவர்கள் தயவுசெய்து வர வேண்டாம். வீட்டில் டிவியில் பார்க்கவும் என கூறி விட்டார்கள். அப்படி வந்தவர்களை போலீஸ் ஏன் கூட்டம் பாதுகாப்பற்றது வீட்டிற்கு செல்லுங்கள் என ஏன் கூறவில்லை?. அவர்களே வரவேண்டாம் என கூறி விட்டார்கள், உங்கள் பாதுகாப்பு உங்களுக்கு என ஏன் அகற்ற வில்லை. காவல்துறை, கூட்டம் நடத்துவர்களுடன் ஆலோசனை, தொடர்பில் இருந்து இருக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பை அவர்கள் மட்டுமே உறுதிசெய்ய முடியும். அதைதான் அண்ணமலை அவர்கள் கட்சிகள் கடந்து, இவர்கள் இளைஞர்கள் கூடினால் அவர்கள் நடத்தை எப்படி இருக்கும் என படித்த உங்களுக்கு தெரியாதா? என கேட்கிறார். நீங்கள் த.வெ.க கட்டுபாடு மதிக்கவில்லை என்றால், த.வெ.கவும் எங்கள் விதிகளை மக்கள் மதிக்கவில்லை அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்பார்கள். பிரச்சினை என்றது மத்திய அரசு தலையீடுகிறது. அதேபோல் திருச்சி கூட்டத்திற்கு பிறகு மக்கள் பாதுகாப்பு முக்கியம் என அரசு தலையிட்டு இருக்க வேண்டும். அவர்களுக்கு வழிக்காட்டுதலை, இதை போன்ற அசம்பாவிதம் நடந்தால் முழு பொறுப்பு நீங்கள் ஏற்கிறீர்களா என கேட்டு இருக்க வேண்டும். முழுக்க முழுக்க தற்போதைய அரசின் காழ்ப்புணர்ச்சி. மக்கள் அக்கறையின்மை.


KOVAIKARAN
அக் 02, 2025 10:05

பா.ஜ.வின் கருவி விஜய் என்று உளறுவாயன் வளவன் கூறுகிறார். இவர், திமுகாவின், கருவி இல்லையா, அவர்களின் ஊதுகுழல் இல்லையா, அவர்கள் முன்னால் உட்காருவதற்கு கூட தயங்கும் பெரிய தைரியசாலி இல்லையா? இப்படி எவ்வளவோ இல்லையா என்று நாம் கேட்க நிறைய உள்ளது. அப்படி நாம் கேட்டால் அது நமக்குத்தான் அவலம். அவருக்குத்தான், ஒன்றுமே இல்லையே. இரண்டு சீட்டுக்களாக கட்சியை திமுகாவிடம் அடமானம் வைத்தவர்தானே இவர்.


Rajah
அக் 02, 2025 08:47

எந்தக் கட்சியும் தனது தொண்டர்கள் இறப்பதை விரும்பமாட்டார்கள் என்று முதல்வர் சொல்கின்றார். ஆகவே விஜய் மீது தவறு இல்லை என்று சொல்ல வருகின்றாரா? அப்படியொன்றும் இல்லை. தனது எண்ணத்தை திருமால் போன்ற கருவி மூலம் அவர் நிறைவேறுகின்றார். இதுதான் திராவிட சித்தாந்தம். இந்த தந்திர அரசியலை மக்கள் புரிந்த கொள்ளவேண்டும். திமுகவின் கருவி திருமா, கம்மிகள் என்பதுதான் உண்மையானது. விஜய் பாஜகவில் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் கூட்டணி தர்மத்தை மீறி ராகுல் காந்தி விஜய்யோடு தொலைபேசியில் பேசுகின்றார். திருமாவுக்கு அது தவறாகப் படவில்லை. அமித்ஷா அவர்கள் பேசினால் அது தவறு. மக்களாகிய நீங்கள்தான் இதற்கு தீர்ப்பு வழங்க வேண்டும். வாழ்க பாரதம்.


குரு குரு திரு திரு
அக் 02, 2025 08:33

நீர் எந்த கருவி?


duruvasar
அக் 02, 2025 07:58

புலம்பலுக்கு மட்டும் வாயை திறக்கிறார்.


Makkal Manam
அக் 02, 2025 06:56

விஜய் கூட்டணிக்கு வந்தாலும் வராவிட்டாலும் , 2026 இல் NDA கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்


Kanns
அக் 02, 2025 06:36

People Dont Require Opinions of RulingParty DMK-Slave Suitcase Party& PowerMisusers/ MegaLooters


nagendhiran
அக் 02, 2025 06:18

கருவியா கூட இருக்கலாம் தலைவரே? சில ஜென்மங்கள் போல தொங்குசதையாதான் இருக்க கூடாது?


Mani . V
அக் 02, 2025 05:09

கோபாலாபுரத்தின் கருவியாய், கொத்தடிமையாய், ஆளாய் இருக்கும் பொழுது விஜய் பாஜக வின் கருவியாய் இருந்தால் என்ன தவறு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை