உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீல நிற சொகுசு பஸ்களிலும் மகளிருக்கு இலவசம்

நீல நிற சொகுசு பஸ்களிலும் மகளிருக்கு இலவசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதிதாக துவங்கிய, 130 சொகுசு மாநகர பஸ்களிலும், பெண்கள் இலவச பயண திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 'நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டம், தமிழகத்தில் அமலில் உள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் 9,000 நகர பஸ்களில் 7,300க்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பஸ்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னையில் 1,559 சாதாரண கட்டண பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.நகர்ப்புறங்களில், 'ஒயிட் போர்டு' பஸ்களிலும், கிராமப்புறங்களில் நகர பஸ்களிலும், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். தமிழகம் முழுதும் தினமும் சராசரியாக, 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள நீல நிற சொகுசு பஸ்களிலும், இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சாதாரண கட்டண பஸ்களில், பெண்களுக்கான இலவச பயண திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மாநகரப் போக்குவரத்து கழகத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நீல நிறத்தில் இருக்கும், 130 புதிய சொகுசு பஸ்களிலும், பெண்கள் இலவச பயண திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள், 'மகளிர் விடியல் பயணம்' என பெயரிடப்பட்டு இருக்கும். இந்த வகை பஸ் சேவை துவங்கிய போது, சொகுசு பஸ்களாக இயக்கப்பட்டன. தற்போது, சாதாரண கட்டண பஸ்களாவே இயக்கி வருகிறோம். கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களிலும், நீல நிற டவுன் பஸ்களில் கணிசமான அளவுக்கு, 'மகளிர் விடியல் பயண பஸ்கள்' இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், சிவப்பு நிற சொகுசு மற்றும், 'ஏசி' வகை பஸ்களில், பெண்கள் இலவச பயண திட்டம் விரிவுப்படுத்தப்பட வில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

A. Kumar
அக் 19, 2024 12:58

60 வயதுக்கு மேல் மற்றும் 10 வயதுக்குள் அனைவருக்கும் இலவசமாக்கலாமே சார்.


Rajasekar Jayaraman
அக் 19, 2024 07:57

2026 தேர்தலில் ஓட்டு வாங்க ஏமாற்று வேலை இது எதில் போய் முடியுமோ தமிழகத்தை கடவுள் தான் காப்பபாத்தனும்.


Rajarajan
அக் 19, 2024 06:08

தமிழக அரசு விடியல் அரசு, மகளிர் வளர்ச்சிக்கான அரசு அப்டி இப்டினு அல்லக்கைகள் ஓவர் பில்டப் தந்துட்டு, அப்பறம் விலைவாசி / வரி உயர்ந்திருச்சு அப்டினு ஒக்காந்து புலம்ப கூடாது.


சம்பா
அக் 19, 2024 04:26

மகளிர் மட்டும்தான் ஓட்டு போடறாங்கள?


Kannan Chandran
அக் 19, 2024 00:25

அதுக்கு ஆகும் செலவை எப்படி சரி செய்வீர்கள், ஆண்களின் பேருந்து கட்டணம் இருமடங்கு என்றுதானே..


சமீபத்திய செய்தி