உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உடல் உறுப்பு திருடப்படுவது தி.மு.க., ஆட்சியில் தான்

உடல் உறுப்பு திருடப்படுவது தி.மு.க., ஆட்சியில் தான்

போளூர் : ''பத்து ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சி தான் , தமிழகத்தின் பொற்காலம், '' என பழனிசாமி பேசினார். தன் பிரசார பயணத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று போளூர் தொகுதியில் மக்கள் மத்தியில் பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க., வினர் இப்போது கிட்னியும் திருட ஆரம்பித்துவிட்டனர். நாமக்கல் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த பெண்மணிக்கு கிட்னிக்குப் பதிலா கல்லீரல் எடுத்துள்ளனர். அதுக்கு பணமும் கொடுக்கவில்லை. தி.மு.க., வினர் நடத்தும் மருத்துவ மனைகளுக்கு போகாதீர்கள்; கிட்னி, கல்லீரல் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. மடியில் கனமில்லை உடல் உறுப்புகள் எல்லாம் தி.மு.க., ஆட்சியில் திருட்டு போகுது. யாராவது தி.மு.க.,வினர் நடத்தும் மருத்துவமனைகளுக்கு போயிருந்தால், 'ஸ்கேன்' செய்து உறுப்புகள் இருக்கின்றனவா என்று ' செக்' செய்து கொள்ளுங்கள். எனக்கு நிறைய சொந்தக் காரர்கள் இருக்கின்றனர். அவர்கள் நிறைய தொழில் செய்கின்றனர். அவர்களை நோக்கி அமலாக்கத் துறையோ, வருமான வரித் துறையோ ரெய்டு நடத்தினால், அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஆனால், எது நடந்தாலும், அதோடு என்னை இணைத்துப் பேசுவதையே வாடிக்கையாக்கி இருக்கிறார், தமிழக முதல்வர். எங்களுக்கு மடியில் கனமில்லை; அதனால், வழியில் பயமில்லை. கருணாநிதியையே பார்த்தவர்கள் நாங்கள். 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சி தான், தமிழகத்தின் பொற்காலம். நேற்று திருமாவளவன் துாய்மை பணியாளரை நிரந்தரப் பணியாளர்கள் ஆக்கக்கூடாது என பேசுகிறார். அதை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் எதிர்க்கின்றனர். நிலைமை தலைகீழ் திருமா என்ன; வேறு யார் வந்து தி.மு.க.,வுக்கு முட்டு கொடுத்தாலும், அக்கூட்டணி வெற்றி பெறாது. தி.மு.க., செய்த பாவத்துக்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். கூட்டணி கட்சியினர் சுமக்க வேண்டாம். கொரோனா காலத்தில் விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றினோம். பிரதமரே, அப்போது தமிழக அரசை பார்த்து மற்ற மாநிலங்கள், நிர்வாகம் கற்றுக் கொள்ள வேண்டும் என சொன்னார். இப்போது, நிலைமை தலைகீழ். எந்த மாநிலமும், தி.மு.க., அரசை பார்த்து நிர்வாகம் கற்றுக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 19, 2025 07:53

எங்கள் தலைவர் இருந்திருந்தால்... உயிரினும் மேலான உடன்பிறப்பே .. இன்றயதினம் அன்பு நண்பர் எடப்பாடி அவர்கள் நமது ஆட்சியில் உடல் உறுப்பு திருடப்படுவதாக குற்றசாட்டை எழுப்பியிருக்கிறார்.. இதைப்பார்த்தவுடன் உனக்கு விலாநோக சிரிக்க தோண்றுகிறதல்லவா மனித உடல் உறுப்பை முறைகேடாக அடுத்தவர் உடம்பில் வைத்து பயன்படுத்துவது காலம் காலமாக வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான்,ஏன் சங்கத்தில் கூட நடந்திருக்கிறது .. இதை பெரிதுபடுத்தி கழக ஆட்சியின்மீது களங்கம் கற்பிக்க வந்தேறிகள் மனப்பால் குடிக்கிற்றனர்.. அகுதண்ணியில் ..தமிழை காக்க தாண்டவளத்தில் தலைவைத்து படுத்தவன் நான் ...நெருக்கடி நிலையையும் பார்த்தவர்கள் நாம் ..


முக்கிய வீடியோ