உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீடு உள்ளது. அவரது இல்லத்தில் உள்ள தொலைபேசியை தொடர்பு கொண்டு மர்மநபர்கள் மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து, போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் ராமதாஸ் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ