உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்., வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இ.பி.எஸ்., வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இ.பி.எஸ்., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையை அடுத்து புரளி என்பது தெரியவந்தது.சேலம், நெடுஞ்சாலை நகரில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வீடு உள்ளது. சில தினங்களுக்கு முன்பு, அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், , மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். தொடர்ந்து, வீட்டை ஒட்டிய சாலையிலும் சோதனை நடந்தது. எதுவும் சிக்காததால், ஒரு மணி நேரத்துக்கு பின் வெடிகுண்டு நிபுணர்கள் திரும்பினர். இந்நிலையில் இன்று (மே 28) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இ.பி.எஸ்., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையை அடுத்து புரளி என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை