உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் தரையிறக்கம்

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் தரையிறக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தாய்லாந்து சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடரந்து அந்த விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு 182 பேருடன் இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் பறந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை விமான நிலையத்துக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். அந்த விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனையடுத்து மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ