உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடுதுறை பேரூராட்சி ஆபீசில் வெடிகுண்டு வீச்சு: பாமக நிர்வாகியை கொல்ல முயற்சி

ஆடுதுறை பேரூராட்சி ஆபீசில் வெடிகுண்டு வீச்சு: பாமக நிர்வாகியை கொல்ல முயற்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி, பேரூராட்சி தலைவரும், பாம.க., மாவட்ட செயலாளருமான ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்துள்ளது. மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நான்கு பேர் கொண்ட மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அப்போது ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி சேர்மனும், பா.ம.க.,வடக்கு மாவட்ட செயலாளருமான ஸ்டாலின் மற்றும் இளையராஜா, அருண் உள்ளிட்டோர் இருந்தனர்.இதில் இளையராஜா, அருண் இருவரும் காயமடைந்தனர். விசாரணையில் மர்மநபர்கள் பாமக மாவட்ட செயலாளர் ஸ்டாலினை கொல்ல முயற்சி செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டபகலில் பேரூராட்சி அலுவலகம் மீது நான்கு பேர் கொண்ட மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை