உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் டிக்கெட் புக் செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர் கைது

ரயில் டிக்கெட் புக் செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து, அதிக விலைக்கு பயணிகளிடம் விற்பனை செய்த நபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.ரயில்வே பாதுகாப்பு படையினர், சட்டவிரோத ரயில் டிக்கெட்டுகள் விற்பனை குறித்து கண்டறிய 'உப்லாப்த்' திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். திட்டத்தின்படி, ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மையங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார், திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது முன்பதிவு மையத்தில், நின்றிருந்த நபரிடம் முன்பதிவு டிக்கெட்கள், முன்பதிவுக்கான விண்ணப்பங்கள் இருப்பதை கண்டனர். அந்நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், உத்தர்பாராவை சேர்ந்த இம்ரான் ஹூசைன் சேக், 37 எனத் தெரிந்தது.தற்போது, கோவை எம்.ஜி.என்., வீதியில் தங்கியிருப்பது தெரிந்தது. அவர் ரயில் டிக்கெட்டுகளை போத்தனுார், கோவை, வடகோவை, பீளமேடு, ஒத்தபாலம் ஆகிய முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து, அவற்றை ரூ.300 கூடுதல் விலைக்கு விற்றது தெரிந்தது.அவரது மொபைல்போனை பறித்த போலீசார், அதில் சமீபத்தில் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான, 10 ரயில் முன்பதிவு டிக்கெட்கள் இருந்ததை கண்டனர்.அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, மொபைல்போன், ரூ.26 ஆயிரம் மதிப்பிலான முன்பதிவு டிக்கெட்டுகள், பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Haribabu Poornachari
மே 24, 2025 14:50

முதலில் அவன் இந்தியனாக இருக்க வாய்ப்பில்லை. பங்காளதேஷ்க்காரனாக இருக்க வாய்ப்புண்டு .


Keshavan.J
மே 24, 2025 11:50

இந்த அறிவு நம்ம ஆளுங்களுக்கு இல்லை பாத்திங்களா. மூர்க்கனுங்க எண்ணங்களே வேற லெவல்


Pandi Muni
மே 24, 2025 13:27

அந்த திருட்டு புத்தியாலதான் நம்ம நாட்டயே புடுங்கி வச்சிக்கிட்டு நம்மலயே மிரட்டி பாக்குறான்


வாய்மையே வெல்லும்
மே 24, 2025 10:58

கொடும் பாவியின் சகலபாடி பொத்தனூரிலும் கைவரிசை ... என்ன டிசைனோ உங்க ஆட்களின் திருட்டு மாடல் பிழைப்பு. இந்த வேலை செய்வது தான் மார்க்கம் சொல்லிக்கொடுத்த ஒன்று போல. வெட்கக்கேடு அப்படியே பிரசுரிக்கவும் சாரே


RAVINDRAN.G
மே 24, 2025 10:09

அப்பிராணி சப்பிராணி ஆட்களை சரியா குறிவைத்து பிடிப்பார்கள். டாஸ்மாக்கில் பத்து ருபாய் குவார்ட்டர் பாட்டிலுக்கு கூட வாங்குறாங்க என்பது அனைவருக்கும் தெரியும் . எங்க அதை பிடிங்க பாப்போம்.


Kasimani Baskaran
மே 24, 2025 07:42

கள்ளத்தனம் செய்ய வழிகள் இல்லை என்றாலும் புதிதாக உருவாக்குகிறார்கள்..


அப்பாவி
மே 24, 2025 07:33

அதானே... ஒரே தேசம். ஒரே டிக்ஜெட். ஒரே உருவல். ஐ.ஆர்.சி.டி.சி.


Pandi Muni
மே 24, 2025 13:28

ஒரே மார்க்கம் ஒரே திருட்டு


V Venkatachalam
மே 24, 2025 18:38

ஒரே ஒப்பாரி. இந்த அப்பாவி..


சமீபத்திய செய்தி