ரிலையன்ஸ் ஷோரூம்களில் ஐபோன் - 16க்கு முன்பதிவு
சென்னை:புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, ஆப்பிள் ஐபோன் - 16 வகைகள் அனைத்தையும், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரும்களில் முன்பதிவு செய்து பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.ரிலையன்ஸ் டிஜிட்டல், இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் சில்லரை விற்பனை நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகள், சேவைகளை வழங்குவதில் பெயர் பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் - 16 வகைகள் அனைத்தும், நாடெங்கும் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் சில்லரை விற்பனை கடைகள் மற்றும் இணையதளங்களில் கிடைக்கின்றன.அவற்றை பெற, ஐபோன் - 16 வகைகள் அனைத்துக்கும், வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு, ஐபோன் - 16 வகைகளை வழங்க முடியாவிட்டால், முன்பதிவு தொகை இரு மடங்காக திருப்பி தரப்படும்.கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், ஐபோன்கள் முன்பதிவு இந்த ஆண்டு இரட்டிப்பாகியுள்ளது. தேவை அதிகமாக இருந்த போதிலும், முன்பதிவு செய்யும் அனைவருக்கும், ஐபோன் - 16 வகைகளை வழங்கத் தயாராக இருப்பதாக, ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் அறிவித்து உள்ளது.