உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிறந்தது புத்தாண்டு 2024: பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டம்

பிறந்தது புத்தாண்டு 2024: பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டம்

சென்னை: 2023ம் வருடம் முடிந்து 2024 புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரைகளில் இளைஞர்கள், இளைஞிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என கேக் வெட்டியும், டான்ஸ் ஆடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

2024 புத்தாண்டை வரவேற்க சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தேவாலயங்களிலும், கோவிலிலும் வழிபட்டனர். இதைத்தவிர நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள், ரிசார்ட்களிலும் மக்கள் ஒன்றகாக கூடி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்காணிக்க போலீசார், சென்னை நகர் முழுவதும் 132 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர். 108 இடங்களில் வாகன தணிக்கை நடந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. மெரினா கடற்கரைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் பொதுமக்கள் மெரினா கடற்கரையில் ஆங்காங்கே கூடி புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். விடுதி மற்றும் உணவகங்களில் இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட போலீசார் அனுமதி வழங்கினர். தமிழகத்திலக சென்னையை தவிர கோவை, சேலம் மதுரை திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் கடற்கரையில் ஒன்று கூடி ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.ஆங்கல புத்தாண்டை முன்னிட்டு சேலம் நான்கு ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram pollachi
ஜன 01, 2024 15:15

வாசக நண்பர்கள் அனைவருக்கும் ஸ்வீட்டான ஆங்கில புத்தாண்டு 2024.... வாழ்த்துக்கள்... எல்லா வளமும், நலமும் பெற்று நீடோடி வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.


Ramesh Sargam
ஜன 01, 2024 08:51

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


Sriniv
ஜன 01, 2024 15:29

Wish you a happy new year .


Sriniv
ஜன 01, 2024 16:12

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.


வெகுளி
ஜன 01, 2024 04:35

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை