உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை

கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை

குளித்தலை: கரூரில் கோவில் திருவிழாவின் போது நடனமாடுவதில் ஏற்பட்ட பிரச்னையில், கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழாவின் பூச்சொரிதல் நிகழ்ச்சியின் போது, இளைஞர்கள் உள்பட அப்பகுதி மக்கள் நடனமாடி கொண்டிருந்தனர். அதில் நடனமாடிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் மீது ஒருவர் விழுந்துள்ளார். உடனே, அவர் ஓரமாக சென்று நடனமாடுங்கள் என்று அந்த சிறுவன் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து, சிறுவனை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த மேலும் 2 பேரையும் கத்தியால் தாக்கியுள்ளார். இதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 05, 2025 11:12

முதலில் இது திட்டமிடப்பட்ட கொலையல்ல..... கத்தி வைத்திருக்கிறான் என்றால் அவன் ரௌடி பட்டியலில் வரும் சமூக விரோதியே.... இது போதையால் மதி இழந்து ஆத்திரத்தால் ஏற்பட்ட நிகழ்வு.... இந்த கொலைக்காரனை பிடித்தாலும் நீதிமன்றம் வெகு சுலபமாக ஜாமீன் வழங்கி வெளியே அனுப்பிவிடும். ஒரு கொலை செய்து விட்டான் நிச்சயமாக ஏதாவது கட்சி அவனை தத்து எடுத்து கொள்ளும்....இனி அவன் வாழ்க்கையில் முன்னேற்றம் தான்.....!!!


m.arunachalam
மே 05, 2025 10:46

வளமான தமிழகம் .


அப்பாவி
மே 05, 2025 09:14

கோவில்களில், குறிப்பாக கிராமக் கோவில்களில் பக்தி போய், நடனம் என்ற பெயரில் குத்தாட்டம் போடுகிறார்கள்.


முக்கிய வீடியோ