உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுடன் ஸ்டாலின் திட்டம் புறக்கணிப்பு: வருவாய் துறை சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் புறக்கணிப்பு: வருவாய் துறை சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை:தமிழகத்தில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்டத்தை செப்., 25 முதல் புறக்கணிப்பதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பின் உயர்நிலை குழு கூட்டம் மதுரையில் நடந்தது. அதன் ஒருங்கிணைப்பாளர் முருகையன் கூறியதாவது:'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்டத்தால், பல்வேறு துயரங்களை வருவாய்த்துறையினர் அனுபவிக்கின்றனர். இத்திட்டத்திற்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இரவு, பகலாக வருவாய்த்துறை அலுவலர்கள் பணி செய்ய மாநில, மாவட்ட நிர்வாகங்கள் நிர்பந்திக்கின்றன.செப்., 25 முதல் அத்திட்டத்தை, 40,000 வருவாய்த்துறையினர் புறக்கணிப்பு செய்கிறோம். அரசின் திட்டங்களுக்கு, போதிய அளவு கால அவகாசம் வழங்க வேண்டும். திட்டங்களை நிறைவேற்ற நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, செப்., 25ல் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.சனிக்கிழமைகளில் அரசின் ஆய்வு மற்றும் திட்ட பணியை செய்ய நிர்பந்திக்கக் கூடாது; காலை, 10:00 முதல் மாலை, 5:45 மணி வரையிலான நேரம் தவிர மற்ற நேரங்களில் பணி செய்ய வற்புறுத்த கூடாது. வருவாய்த் துறையினருக்கான பணி பாதுகாப்பு சட்டம், கருணை அடிப்படையிலான வேலை வழங்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், 45 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. சில கலெக்டர்கள், 20 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளை நிர்பந்திக்கின்றனர்.கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக முதல்வர் வருவாய்த் துறையினருடன் பேசி தீர்வு காண வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் அறிவித்த நாள் முதல் இதிலுள்ள நடைமுறை பிரச்னைகளை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளோம். அரசும், வருவாய்த்துறை அமைச்சரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் தங்களுடைய மாவட்டம், முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கலெக்டரும் மனுக்கள் மீது தீர்வு காண உத்தரவிடுகிறார்கள்.முகாம்களில் பெறப்படும் மனுக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கு நள்ளிரவு வரை ஆகிறது. மனுக்களை பதிவேற்றம் செய்தால் தான் ஊழியர் வீட்டிற்கு செல்லக்கூடிய நிலை. நாள்தோறும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடத்துவதால் வருவாய்த்துறையின் பிற பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை நெறிப்படுத்த வேண்டுமென கூறி ஒன்றரை மாதங்களாக காத்திருந்தோம். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், வேறு வழியின்றி முகாம்களை புறக்கணிக்கிறோம். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தேர்தலுக்கு முன்னதாக, கடைசி 6 மாதத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல்கள் உள்ளன. 10,000 முகாம்களை, 6 மாதங்களுக்குள் நடத்த முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ramesh Sargam
செப் 07, 2025 11:44

இந்த திட்டத்தின் மூலம் வாங்கப்பட்ட மனுக்களும் சென்னையின் கூவம் நதியில் மிதக்குதாம்.


Ethiraj
செப் 07, 2025 09:17

Regular work kept pending and camp drama is going on


Kasimani Baskaran
செப் 07, 2025 06:48

ஆள்பவர்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் மக்கள் பிரச்சினை பெரிதல்ல. மனுவை வாங்கி சாக்கடையில் போட ஒரு திட்டம் என்பது வெட்கக்கேடானது.


Mani . V
செப் 07, 2025 04:41

எது கொள்ளைத் திட்டம் புறக்கணிப்பா?


Ramesh Sargam
செப் 07, 2025 01:24

அரசு அதிகாரிகள் ஒழுங்காக அவரவர் பணியை செய்திருந்தால் இந்த திட்டமே தேவைப்பட்டிருக்காது.


Venkat esh
செப் 06, 2025 23:25

500,ஆயிரம் வாங்கி ஓட்டு போடும் மானங்கெட்ட ஊ₹பிக்கள் சோறு தின்னும் போது தின்பது சோறாக இருந்தால் நினைத்து பார்க்க வேண்டும்.....


Anantharaman Srinivasan
செப் 06, 2025 23:13

எப்பொழுதும் மனுக்களுடன் பேரம் பேசி நோட்டுகளையும் வாங்கி பழக்கப்பபட்ட கைகள். வெறும் மனுக்களை மட்டும் பார்க்கும் கண்கள், கைகளை பின் நோக்கி இழுத்து Strike செய்ய சொல்கிறது.


Nava
செப் 06, 2025 22:17

தமிழக வருவாய் துறை என்றாலே ஊழலின் ஊற்றுக்கண் என்பது உலகறிந்த உண்மை அங்கு நீங்கள் எந்த வேலையும் லஞ்சமில்லாமல் நிறைவேற்ற முடியாது இது சத்தியம்


Tamilan
செப் 06, 2025 22:11

மக்கள் பணிகளை செய்ய மறுப்பது சட்ட விரோதம். இதனால் இவர்களின் லஞ்ச லாவண்ய வருமானம் போய்விடும் பெருமளவு குறைந்து விடும் என்பதால் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஊழல்வாத எதிர்கட்சிகளின் ஆதரவும் இருப்பதால்தான் இப்படி அரசுக்கு எதிராக மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும்.


Kumar Kumzi
செப் 06, 2025 22:34

பார்ர்ரா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு எம்பூட்டு கஷ்ட்டமா இருக்கு ஹிஹிஹி


theruvasagan
செப் 06, 2025 21:44

என்றைக்கு நீங்கள் மக்கள் தரும் மனுக்கள் மீது லஞ்சம் வாங்காமல் தாமதம் செய்யாமல் நேர்மையான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அப்படி.செய்திருந்தால் இத்தனை மனுக்கள் வந்திருக்காதே.


முக்கிய வீடியோ