உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் பிராமணர் சங்கம் போர்க்கொடி

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் பிராமணர் சங்கம் போர்க்கொடி

'வக்கிரம் கலந்து, மத கலாசாரத்தை இழிவுபடுத்தி பேசிய பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்திஉள்ளது.சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்த ஒரு கூட்டத்தில், வனத் துறை அமைச்சர் பொன்முடி, ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தி பேசியதை, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தான், ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர் என்பதை மறந்து, தரம் தாழ்ந்து பேசியது, அவரது வக்கிரப் புத்தியை காட்டுகிறது. பொது மேடையில் ஏதோ ஒரு விலைமாது கதை ஒன்றைக் கூறி, அதில் தேவையில்லாமல் சைவம் மற்றும் வைணவம் என்று கீழ்த்தரமான விமர்சனங்களை கூறி, ஹிந்து மத சின்னங்களையும், பழக்க வழக்கங்களையும் கொச்சைப்படுத்தி இழிவாக பேசியுள்ளார்.இது, ஹிந்துக்களின் மனதை பெரிய அளவில் காயப்படுத்தியுள்ளது. எனவே, பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து, முதல்வர் நீக்க வேண்டும். ஏற்கனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கைதாக வேண்டிய நேரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு, அவரை காப்பாற்றியது மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது.இந்நிலையில், இதுபோன்ற தரம் தாழ்ந்த, வக்கிரப் பேச்சு குறிப்பாக ஹிந்து மத கலாசாரத்தை இழிவுபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் அமைச்சராக தொடர தகுதியில்லாதவர். எனவே, பொன்முடிக்கு முதல்வர் தக்க தண்டனை கொடுப்பார் என்று நம்புவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaranarayanan
ஏப் 12, 2025 10:34

பொது மேடையில் ஏதோ ஒரு விலைமாது கதை ஒன்றைக் கூறியவன் தந்து சொந்த வாழ்க்கையின் அனுபவத்தை நடந்ததை மக்களிடையே பரிமாறிக்கொண்டான் அவ்வளவேதான் இதைப்போய் தவறாக எண்ணாதீர்கள் இப்போது அவனுக்கு தனது வாழக்கையில் நடந்ததை கூறிவிட்டொமே என்று நினைத்து நினைத்து மிக்க சந்தோசம்


தியாகு
ஏப் 12, 2025 09:36

ஆளுநர் ஜனாதிபதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் முறையீடு செய்ய வேண்டும்


சமீபத்திய செய்தி