உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

மதுரை : விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வகுமாரின் 41, உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் வழங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் வேலவன்கோட்டை புதுப்பாளையத்தைச் சேர்ந்த செல்வகுமார், சிலநாட்களுக்கு முன் இரவு கனப்பாடி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, மற்றொரு வாகனம் மோதி காயமடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை தலைக்காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஜன.,28 ல் அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி சின்னப்பொண்ணு ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து அவரது கல்லீரல் திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் திருச்சி எஸ்.ஆர்.எம்., மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கும், கருவிழிகள், எலும்பு, தசைநார்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கும், தோல் மதுரை கிரேஸ் கென்னட் மருத்துவமனைக்கும் தானம் வழங்கப்பட்டது. பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி