உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லியில் பட்டாசு வெடிக்க 4 நாள் சுப்ரீம் கோர்ட் அனுமதி: தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரமா?

டில்லியில் பட்டாசு வெடிக்க 4 நாள் சுப்ரீம் கோர்ட் அனுமதி: தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளி முன்னிட்டு டில்லியில் 4 நாட்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, மூன்று நாட்கள் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.வரும் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி அன்று பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். தீபாவளி நாளில் காலை, 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ok0usc80&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' தீபாவளி பண்டிகையன்று, காலை, 6:00 முதல் 7:00 மணி வரையும். இரவு 7:00 முதல் 8:00 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேவையற்ற கட்டுப்பாடுகள்

டில்லியில் பட்டாசு வெடிக்க 4 நாட்கள் சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்குவதாக தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் தீபாவளி நாளில் மட்டும் காலை, 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே, மொத்தம் 2 மணி நேரம் அனுமதி வழங்கி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது. தற்போது பட்டாசு விற்கும் விலையில், குழந்தைகள் அதிகநேரம் பட்டாசு வெடிக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் நிலையில், இந்த நாளில் வெடிக்கக் கூடாது, இந்த நேரத்தில் வெடிக்கக் கூடாது என்று தேவையற்ற கட்டுப்பாடுகளை திணிப்பது சரியல்ல. குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, கூடுதல் நாட்களுக்கு தினமும் 3 மணி நேரமாவது பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர். இதனால், பட்டாசு வெடிக்க தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் அனுமதி வழங்க வேண்டும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு கட்டுபாடுகள் பாதிப்பை ஏற்படுத்த கூடாது என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

வாபஸ் பெறணும்

தீபாவளி பண்டிகை என்பது ஹிந்துக்களின் பண்டிகையாக இருந்தாலும், அனைத்து மதத்தவரும் கொண்டாடும் திருவிழா ஆகும். பட்டாசு வெடித்து மகிழ்வதை அனைத்து மதங்களைச் சேர்ந்த குழந்தைகளும் செய்கின்றனர். அந்த வகையில், இது அனைத்து மதத்தவரும் கொண்டாடும் திருவிழா என்று அரசு கருத வேண்டும். அந்த அடிப்படையில், இது ஒரு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பண்டிகை. இதை கொண்டாடுவதற்கு, நேரக் கட்டுப்பாடு விதித்து இடையூறு செய்வது, பண்டிகை உணர்வை கெடுப்பது போலவே இருக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவை வாபஸ் பெற உத்தரவிட வேண்டும்.

லஞ்சம் பெருகவே வழிவகுக்கும்!

இப்படி நேரக் கட்டுப்பாடு விதிப்பது, எந்த விதத்திலும் மக்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ பயன் தராது. பட்டாசு வியாபாரிகளிடம் போலீசார் மாமூல் வாங்குவதற்கு மட்டுமே பயன்படும். தீபாவளி முடிந்ததும் போலீசார் கண்துடைப்புக்காக சிலர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து, தாங்களும் வேலை செய்ததாக கணக்கு காட்டுவர். எனவே நாட்டுக்கும் மக்களுக்கும் எந்த விதத்திலும் பயனில்லாத நேர கட்டுப்பாடு உத்தரவை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மாற்றி அமைக்க வேண்டும். குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, போதிய நேர அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியிட வேண்டும்.

தடை விதிப்பது சரியல்ல

டில்லியில் பட்டாசு வெ டிக்க தடையை விலக்கக் கோரி, மத்திய அரசு, டில்லி மாநில அரசு, பட்டாசு தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது: டில்லியில் பட்டாசு வெடிக்க ஒட்டுமொத்தமாக தடை விதித்தது சரியல்ல. ஒட்டுமொத்தமாக, பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. மேலும், அது சிறப்பான முடிவல்ல. எனவே, நடுநிலைமையுடன் உத்தரவு பிறப்பிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பட்டாசு வெடிக்க தடை விதிப்பது சரியல்ல என்பதை சுப்ரீம்கோர்ட் தெளிவுப்படுத்தி விட்டது. அந்தவகையில் தமிழக அரசும், பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்காமல், 3 நாட்களுக்கு தினமும் காலை 3 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினர் கோரிக்கை ஆகும்.

4 நாள் பட்டாசு வெடிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டில்லியில் பசுமை பட்டாசு வெடிப்பதற்கு அக்., 18ம் தேதி முதல் அக்., 21ம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. குறிப்பிட்ட இந்த நாட்களில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்து தீர்ப்பு அளித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 118 )

M.S Balamurugan
அக் 15, 2025 21:23

அப்புறம் எங்கேயாச்சும் பட்டாசு வெடிச்சு அசம்பாவிதம் நடந்தா உடனே ஆளுங்கட்சி சரியில்லைன்னு சொல்லுவீங்க.... ம்ம்ம்ம்... என்ன மாதிரி ஜென்மங்கள் நீங்க...


Kudandhaiyaar
அக் 15, 2025 19:30

மிகவும் நல்லது. தமிழக மக்களுக்கு திராவிட தி மு க ஆட்சி இன்னும் 30 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் மக்கள் சாராயம், போதை தவிர வேறு எதையும் நினைத்துவிடக்கூடாது. வாழ்க குடும்ப அரசாட்சி, அழியட்டும் தமிழிக மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் பேச்சு சுதந்திரம். வேறு வழியில்லை. அடங்கி தான் போகவேண்டும்


surya krishna
அக் 15, 2025 19:07

இந்து விரோத திருட்டு திராவிட அரசு வேற என்ன செய்யும்?


கண்ணா
அக் 15, 2025 17:52

தீபாவளி வந்தா போதும் ஒரு சிலருக்கு வியாதி வரும்........இன்னும் சில ஆண்டுகளில் இந்துக்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தீபாவளி பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டும் என்று சட்டம் வரலாம். வேடிக்கை பாருங்கள்.


Easwar Kamal
அக் 15, 2025 17:46

அப்படியே தமிழ்நாட்டை கண்ணும் கருத்துமா பாத்துக்கிறானுவலாம். இவங்களை எல்லாம் என்ன பண்றது. ஆடுங்க இன்னும் 6 மாசமா ? அதுக்கு அப்புறம் என்ன பண்றீங்கன்னு


Siva Balan
அக் 15, 2025 17:44

பாகிஸ்தானில் இந்துக்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. திமுக ஆட்சியில்.


Kumar Kumzi
அக் 15, 2025 17:33

வரும் தேர்தலில் இந்துமத ஜென்ம விரோதி ஓங்கோல் துண்டுசீட்டு கும்பலுக்கு மணி அடிப்போம்


S Sivakumar
அக் 15, 2025 17:19

தமிழக முதல்வர் தமிழ் நாட்டை மத நல்லிணக்கம் காரணமாக தென் சவுதி அரேபியா என பாவித்து வருகின்றனர்


r ravichandran
அக் 15, 2025 17:19

தமிழ் நாட்டு மக்கள் இந்த ஒரு விஷயத்தில் அரசின் கட்டுப்பாட்டை எப்போதும் மதித்தது கிடையாது.


abdul kareem
அக் 15, 2025 16:43

மோர் ஆஸ்துமா,மோர் கேன்ஸர், வாழ்த்துக்கள் டு டெல்லி மக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை