உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பில் தொகை விடுவிக்க லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் அதிகாரி!

பில் தொகை விடுவிக்க லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் அதிகாரி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: அரசு ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய முதுகுளத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். அரசு ஒப்பந்த பணிக்கான பில் தொகையை விடுவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் ஒருவர் மனு கொடுத்திருந்தார். இந்தத் தொகையை விடுவிக்க வேண்டுமெனில், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால் பாண்டியன் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர், இது தொடர்பாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால் பாண்டியனுக்கு அந்த ஒப்பந்ததாரர் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார்.அப்போது, மறைந்திருந்த டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், பால் பண்டியனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

orange தமிழன்
டிச 05, 2024 09:39

இந்த தியாகிக்கு பதவி உயர்வு நிச்சயம்....


raja
டிச 05, 2024 02:19

அப்புறம் என்ன தண்டனையாக மாடல் அரசு நல்ல பசை உள்ள இடமாக மாற்றம் செய்து பதவி உயர்வு கொடுத்து அழகு பார்க்கும்...


Bala
டிச 04, 2024 22:02

அவரை சென்னையிக்கு மாற்றம் செய்யப்பட்டு நாளை அதே பணியில் நியமிக்கப்பட்டார்.


Venkateswaran Rajaram
டிச 04, 2024 21:59

இதில் காண்ட்ராக்டர்கள் மிகவும் யோக்கியர்கள் போல் சித்தரிக்கப்படுகிறார்கள் முதலில் இவர்கள் முடித்த வேலையின் தரத்தை சோதனை செய்ய வேண்டும்... சரியான தரத்தில் இருந்தால் உண்மையிலேயே இவர் பாராட்டப்பட வேண்டும்


தம்பி
டிச 04, 2024 21:42

மூஞ்சிலயே திருட்டு திராவிடக் களை தெரியுது.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 21:35

ஜஹாங்கிர் க்கு கிடைத்த வெகுமதி, கவுரவம் இவருக்கும் கிடைக்கணும் ..... பார்த்து பண்ணுங்க விடியல் சார் .....


r ganesan
டிச 04, 2024 21:04

அதிஷ்டம் சார். தலைமைக்கு தெரிஞ்சா நல்ல போஸ்டிங் கிடைக்கும். லஞ்சம் வாங்கியவருக்கு


Baskaran Ramasamy
டிச 04, 2024 21:02

5000ரூபாய்க்கு ஆசைபட்டு மாதம் 1லட்சம் வரக்கூடிய வேலை போச்சே


Perumal Pillai
டிச 04, 2024 20:57

அவன் திருநெல்வேலி கார்பொரேஷன் கமிஷனர் ஆக போகிறான் .


Venkatramanan
டிச 04, 2024 20:55

அன்னாருக்கு அடுத்த போஸ்டிங் எங்கே?


சமீபத்திய செய்தி