உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ. 7,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

ரூ. 7,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

-நமது நிருபர்-நாகை மாவட்டம், ஆவராணியை சேர்ந்தவர் ரேணுகா, 34. இவரது கணவர் ஆனந்தன் சமீபத்தில் இறந்தார். இந்நிலையில், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரண தொகை பெறுவதற்காக, ஆவராணி வி.ஏ.ஓ., அலுவலகத்தில், ரேணுகா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.சான்றிதழ் அளிக்க வி.ஏ.ஓ., செல்வம், 7,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத ரேணுகா, நாகை, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், அறிவுறுத்தல்படி ரேணுகா, வி.ஏ. ஓ.,விடம் பணத்தை கொடுக்கும் போது, இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ., செல்வத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhaskaran
அக் 28, 2026 05:32

எங்க ஜாக்டோ இருக்கும்வரை கவலைஇல்லை நடவடிக்கை எல்லாம் கண்துடைப்பு விரைவில் மீண்டும் வசூல் செய்வார் இந்த புண்ணியவான்


Kasimani Baskaran
அக் 28, 2026 04:03

அட பிளடி.. பிச்சை எடுப்பதுதான் எடுத்தான் அதை ஒரு கணிசமான தொகையாக எடுத்து மாட்டியிருக்கலாம்... வெறும் 7500க்கு கைது என்பது திராவிட அவமானம்.


தாமரை மலர்கிறது
அக் 28, 2026 00:59

ரொம்ப கம்மியா லஞ்சம் வாங்கிட்டார்ன்னு தான் இவரை பிடிச்சிட்டாங்க.


Dum
அக் 27, 2026 21:21

மனிதன் கரையானை விட மோசமான ஜந்து


கடல் நண்டு
அக் 27, 2026 20:19

அரசு பிச்சைக்காரன் தீபாவளி விடுமுறையில் .. புரைஓடிக்கொண்டிருக்கும் மனிதம், விலங்குகளை விட கொடியவர்கள் ..கடும் தண்டனைகள் கொடுக்காத வரை , இந்நிலை தொடரும் ..