உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாரியத்துடன் இணைந்து செயல்பட பிரிட்டன் விருப்பம்

மின் வாரியத்துடன் இணைந்து செயல்பட பிரிட்டன் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக மின் தேவையை மு ன்கூட்டியே துல்லியமாக அறிதல், 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக, மின் வாரியத்துடன் இணைந்து செயல்பட, பிரிட்டன் விருப்பம் தெரிவித்துள்ளது. அடுத்த நாள் மின் தேவை எவ்வளவு இருக்கும் என்பதை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், முந்தைய நாளே கணித்து, அதற்கு ஏற்ப உற்பத்தி, கொள்முதல் பணிகளை மேற்கொள்கிறது. மின் தேவையை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது உள்ளிட்ட பணிகளை, மின் வாரியத்துடன் இணைந்து செயல்படுத்துவது தொடர்பாக, சென்னையில் மின் வாரிய அதிகாரிகள், பிரிட்டன் துாதரக அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினர். இதில், மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்குனர் அனிஷ்சேகர், பிரிட்டன் காலநிலை மாற்ற ஆலோசகர் நயனிகா, நிலைத்தன்மை காலநிலை மாற்ற ஆலோசகர் க்ரித்திகா குலாட்டி உள்ளிட்டோர் பங்கேற் றனர். இக்கூட்டத்தில், மின் தேவையை முன்கூட்டியே துல்லியமாக அறிதல், 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பு, தரவு பகுப்பாய்வு, 'டிஜிட்டல்' தொழில்நுட்ப தீர்வு, இணைய பாதுகாப்பு, நுகர்வோர் மைய மேம்பாடு ஆகிய பணிகளில், இரு தரப்பும் இணைந்து செயல்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த திட்டங்களுக்கு மின் வாரியம் செலவு செய்யாது என்றும், பிரிட்டன் தன்னுடைய செலவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இத்திட்டங்கள் தொடர்பாக, இரு தரப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப, வரைவு ஒப்பந்த அறிக்கை தயார் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில், அப்போது தான் ஏதோ பேச்சு நடத்தப்பட்டது என்று விட்டு விடாமல், இந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 24, 2025 16:17

குன்றியாவோ பிரித்தானியாவோ அனல் , புனல், காற்றாலை மின் உற்பத்தி இயந்திரங்களில் எந்த புதுமையையோ மாற்றத்தையோ செய்யப்போவதில்லை. இவர்கள் செய்ய நினைப்பது கணினி உதவியுடன் மின் தேவையை முன் கூட்டியே துல்லியமாக அறிதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாகத்தான். இது முழுக்க முழுக்க சாஃப்ட்வெர் தொடர்பானது. இன்றைய நிலையில் உலகிலேயே இந்த சாஃப்ட்வெர் தொழில் நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடு இந்தியாதான். இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா மாநிலத்தவரே இந்த தொழில் நுட்பம் நன்கு அறிந்தவர்கள். இந்த உண்மை தெரிந்தும் மின்வாரியம் பிரித்தானியாவிடம் ஒப்பந்தம் போடுகிறது என்றால் தேர்தல் வருகிறது என்றுதானே அர்த்தம். வழக்கம்போல ஒன்றிய அரசு குன்றிய அரசின் செயலுக்கு வாய் மூடி அனுமதி கொடுக்கும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 24, 2025 12:48

பிரித்தானியா ஒரு காலனி நாடு என்பதால் காலனி என்ற வார்த்தைக்கு தடை விதித்து குன்றிய நாடு ஆணையிட்டுள்ளது. அதனால் பிரித்தானியாவுக்கு பதிலாக செபோர்கா, பவுல்வியா மற்றும் லோடோனியா நாடுகளுடன் ஒப்பந்தம் போடலாம். ஜி ஸ்கொயருக்கு நல்ல பிசினஸ் கிடைக்கும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 24, 2025 11:54

பிரித்தானியாவுக்கு பதிலாக கைலாஸாவுடன் மின்வாரியம் தொழில்நுட்ப ஒப்பந்தம் போட்டிருக்கலாம்.


Barakat Ali
ஜூலை 24, 2025 11:50

ஏன், முன்னூறு வருடங்களுக்கும் மேலாக கொள்ளையடிச்சது பத்தலையா ????


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 24, 2025 10:52

நல்லவர் வல்லவர் என்று நான் நம்பிக்கொண்டிருந்த அதிகாரியும் கொ ப செ வாக மாறி இது போன்ற தேர்தல் விளம்பரங்கள் செய்வது வருத்தமாக இருக்கிறது.


Arul Narayanan
ஜூலை 24, 2025 20:28

மாறா விட்டால் ஓய்வு பெறும் நாளில் சஸ்பென்ட் ஆக வேண்டிய இருக்குமே.


பாரத புதல்வன்
ஜூலை 24, 2025 10:46

ஒரு அரசு நிறுவனத்தை எப்படி நஷ்டத்தில் நடத்தி, பொருளாதாரத்தை நாசமக்குவது, ஊழலில் திளைத்து சொத்து சேர்ப்பது என்று கற்று கொள்ள முடியும்.


Varadarajan Nagarajan
ஜூலை 24, 2025 09:32

மின் பகிர்மான கழகத்தை எப்படி தொடர் நஷ்டத்திலேயே வைப்பது என்பதை வேண்டுமானால் நம்மிடமிருந்து பிரிட்டன் கற்றுக் கொள்ள முடியும். கமிஷன் கரப்ஷன்களை எவ்வாறு திறமையாக செயல்படுத்துவது மற்றும் மின்கட்டணத்தை எத்தனைமுறை எவ்வளவு உயர்த்தினாலும் நிர்வாகத்திற்கு லாபம் என்ற சொல்லே தெரியாமல் எப்படி கையாள்வது என்பதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்குமளவிற்கு நம்மிடம் அபரிமிதமான திறமை உள்ளது. அவர்கள் அதை தெரிந்துகொள்ள நாம் ஏதாவது புதிதாக கட்டணத்தை நிர்ணயிக்கலாம். அதற்கும் மின் ஒழுங்குமுறை ஆணையம் நிச்சயம் அனுமதி அளிக்கும்.


Dv Nanru
ஜூலை 24, 2025 09:31

தமிழக மின் தேவையை முன்கூட்டியே துல்லியமாக அறிதல், டிஜிட்டல் தொழில்நுட்பம் அது எல்லாம் இருக்கட்டும் ஏன் எப்போதும் மின்சாரவாரியம் நஷ்டத்தில் போகுது இது வரைக்கும் ஒரு நல்ல திறமை மிக்க அதிகாரி கிடைக்கவில்லை ஆனால் மின்சாரவாரியத்தில் வேலை செய்யும் மற்றும் மந்திரிகள் செல்வ செழிப்போடு இருக்காங்க அது எப்படி ...8 கோடிக்கான கேள்வி ...??


raja
ஜூலை 24, 2025 08:43

கேக்கிறவன் கேனையன்னு இந்த திருத்தி திராவிட வீடியோ மாடல் அரசு சொல்லுது எந்த லாபமும் இல்லாமல் அவன் மட்டும் அவன் செலவில் திட்டத்தை செயல் படுத்துவானாம்... இவனுவோ அதை மேற்பார்வை செய்வான்னுவோலாம் ..


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 24, 2025 08:19

மின்னியல் துறையிலும் அல்லது மின்னணு துறையிலும் பிரித்தானியாவிடம் சிறந்த தொழில் நுட்பம் கிடையாது . அதனால் இந்த செய்தி தேர்தலுக்கு பயன்படும் செய்தியாகவே இருக்கக்கூடும்