உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொந்த ஊர் பயணம்... பஸ், விமான கட்டணம் பல மடங்கு எகிறியது!

சொந்த ஊர் பயணம்... பஸ், விமான கட்டணம் பல மடங்கு எகிறியது!

சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி, சென்னையில் வசித்து வருவோர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதால், பேருந்து, ரயில், விமான நிலையங்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. அரசு பேருந்துகளில் மட்டும் 3.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இன்று ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்து சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து லட்சகணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பயணியரின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இரண்டு நாட்களாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இரண்டாவது நாளாக, நேற்றும் பயணியர் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு சென்றதால், கிளாம்பாக்கம், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான விரைவு ரயில்கள், சிறப்பு கட்டண ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னையில் முக்கிய நுழைவு பகுதிகளான ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில், நேற்று மாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆயுதபூஜையொட்டி தொடர் விடுமுறை வருவதால், இரண்டு நாட்களாக மக்கள் சொந்த ஊர்களுக்கு ஆர்வமாக புறப்பட்டு செல்கின்றனர். சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளோடு, நேற்று முன்தினம் 700 சிறப்பு பேருந்துகளும், நேற்று 2,000 சிறப்பு பேருந்துகளும் இயக்கப் பட்டன.கடந்த இரண்டு நாட்களில் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். 50,000க்கும் மேற்பட்டோர், அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களோடு, பல்வேறு வழித்தடங்களில் 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னையில் இருந்து ரயில்களில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்' என்றனர்.

விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

தென்மாவட்டங்களுக்கு ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் செல்ல முடியாதவர்கள், ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்தனர். ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தை விட 40 சதவீதம் வரை அதிகரித்தது. தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, துாத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணியர் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிகரித்தது. அதன் காரணமாக, விமான நிறுவனங்களும் கட்டணத்தை மூன்று மடங்கு வரை உயர்த்தியுள்ளது.

விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

தென்மாவட்டங்களுக்கு ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் செல்ல முடியாதவர்கள், ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்தனர். ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தை விட 40 சதவீதம் வரை அதிகரித்தது. தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, துாத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணியர் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிகரித்தது. அதன் காரணமாக, விமான நிறுவனங்களும் கட்டணத்தை மூன்று மடங்கு வரை உயர்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

subramanian
அக் 11, 2024 13:31

மானம் ......கெட்ட சுயநல திராவிட மாடல் பினாமி ஆம்னி பஸ்கள். தமிழகத்தின் சாபக்கேடு. போடுங்க அம்மா ஓட்டு பணம் பையில் போட்டு.


kulandai kannan
அக் 11, 2024 12:37

திருமணமாகாதோர் பயணிப்பது ஓகே. குழந்தை குட்டிகளுடன் அவதிப்பட வேண்டிய அவசியம் என்ன?


Raman
அக் 11, 2024 11:41

Happening for years, every week, festivals, Casual leave adjustments, earned leave etc. they dont work properly at all...most of the times involved in ticket booking, travelling and complaining fuel price, central government policies etc . We must seriously contemplate holiday procedures...thrice in a year travel is ok, however every week is terrible.. they dont work at all..


Chidambarakrishnan K
அக் 11, 2024 10:31

ஊருக்கு சென்றே ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கும் வரை ஆம்னி பேருந்துகள் மற்றும் விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த தான் செய்வார்கள். தாங்கள் இருக்கும் இடம் தான் இனி தங்களுக்கான சொந்த ஊர் என்று மக்கள் நினைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.


அப்புசாமி
அக் 11, 2024 08:42

அவசரமா ஊருக்குப் போகணும்னா அதுக்கான விலையைக்.குடுத்தே ஆகணும். காசிருந்தா வந்தே பாரத், விமானத்துல, டாக்சில போங்க. காசில்லேனா தமிழக அரடு லொட லொடா அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸுல போங்க. ரயில்ல கழிப்பறை பக்கத்துல உக்காந்துக்கிட்டு போங்க. முடியலியா? இருக்குற இடத்திலேயே கொண்டாடுங்க.


hari
அக் 11, 2024 13:11

ஆமாம் அப்புசாமிக்கு 200 ரூபாய் கூலியும், ஷேர் ஆட்டோவும் போதும்.... காலமெல்லாம் ஒரே இடத்தில் கொத்தடிமையை இருக்க


Valayapatti Kanniappan Kanniappan
அக் 11, 2024 08:35

விசேட நாட்களில் சொந்த ஊருக்குப் போவதைத் தவிர்த்து, அதற்குச் செலவிடும் தொகையை மிச்சப் படுத்துங்கள். தனியாரோ, அரசோ அடிக்கும் கொள்ளைக்குத் துணை போகாதீர்கள். சொந்த ஊரிலேயே வேலையைத் தேடிக் கொள்ளுங்கள்.


கிஜன்
அக் 11, 2024 07:31

இப்பவும் வந்தே பாரத் ... அதே கட்டணத்துடன் தான் இயங்கி வருகிறது ..... பண்டிகை என்பதற்காக 5000 ஆக்கவில்லை .. அதையும் குறிப்பிட வேண்டியது தானே ...


அப்பாவி
அக் 11, 2024 15:59

வந்தே பாரத்தில் தினமும் உருவல்தான். பண்டிகை பெசல்லாம். கிடையாது.


Rajan
அக் 11, 2024 06:24

இது எப்போதும் நடக்கும் நிகழ்வு. இதை தவிர்க்க மற்ற மாவட்டங்களில் முன்னேற்றம் தேவை. அதுவும் ஐடி நிறுவனங்கள் கவனிக்க வேண்டியவை


முக்கிய வீடியோ