உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்கம்பி மீது உரசிய பஸ்; மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பரிதாப பலி

மின்கம்பி மீது உரசிய பஸ்; மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பரிதாப பலி

ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே தனியார் பஸ், தாழ்வாகச் சென்ற மின்கம்பி மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து அகல்யா (வயது 20) என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருப்பதூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து மேல்மருவத்தூர் சக்தி கோவிலுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதி அருகே, பஸ், தாழ்வாகச் சென்ற மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. இதில், அகல்யா (வயது 20) என்ற இளம் பெண் உயிரிழந்தார். விபத்து குறித்து ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
டிச 21, 2024 15:41

இதை நம்ப முடியவில்லை???அது எப்படி 40 பேரில் ஒரு பெண் மட்டும் எப்படி பலி???மின்சாரம் பாய்ந்தால் பஸ்ஸில் உள்ள அனைவர் மீதும் தான் மின்சாரம் பாயும்??? பஸ் இன்சுலேஷன் - ரப்பர் டயர் மீது உள்ளதால் அது இன்சுலேஷன் இதை எரியும் அந்த பெண் காட்டும் ருந்தால் எனில் ????


சம்பர
டிச 21, 2024 10:44

அநேக இடத்தில தாழ்வாக தான் உள்ளது சம்பந்த பட்ட அதிகாரிகள பணிநீக்கம் செய்தால் ஒழிய தீர்வு இல்ல


புதிய வீடியோ