உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல கோடி ரூபாய் சொத்துக்காக மதுரையில் தொழிலதிபர் கடத்தல்

பல கோடி ரூபாய் சொத்துக்காக மதுரையில் தொழிலதிபர் கடத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு, வீடு புகுந்து தொழிலதிபரை கடத்திய வழக்கில், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் அவர் மீட்கப்படாத நிலையில், முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை, பீபிகுளத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன், 56. மதுரையில் கல்வி நிறுவனங்கள், மில் நடத்தி வரும் பிரபல தொழிலதிபரின் நெருங்கிய உறவினர். பைபாஸ் ரோட்டில், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்கும் தொழில் செய்கிறார். திருமணம் ஆகாதவர். இவருக்கு, குற்றாலம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் சொத்துக்கள் உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lz1wgjac&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த சிலர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுந்தரராமனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தனர். அது தன்னுடைய நிலம் எனக்கூறி, ஆவணங்களுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சுந்தரராமன் வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற வளாகத்திலேயே, சுந்தரராமனுக்கு எதிர்தரப்பினர் மிரட்டல் விடுத்தனர்.இந்நிலையில், இடப்பிரச்னை தொடர்பாக, ஏப்., 14ல் சுந்தரராமன் வீட்டிற்கு சிலர் வந்து பேச்சு நடத்தினர். ஆனால், சுந்தரராமன் ஒப்புக்கொள்ளாததால், அவர்கள் வந்த காரில், அவரை கடத்திச் சென்றனர்.அங்கிருந்த கடை ஊழியர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொடர் விசாரணைக்கு பின், கடத்தலுக்கு உதவியதாக, நேற்று முன்தினம், ஐந்து பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். நேற்று, நான்கு பேரை கைது செய்தனர். பெயர், விபரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். இதற்கிடையே, சுந்தரராமனை மீட்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரில் சிலர், வடமாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.போலீசார் கூறுகையில், 'விரைவில் சுந்தரராமன் மீட்கப்படுவார். அப்போது தான், அவர் கடத்தப்பட்டதற்கான உண்மையான காரணம், இதில், சம்பந்தப்பட்டிருக்கும் குற்றவாளிகள் குறித்தும் தெரியவரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Suresh Sivakumar
ஏப் 17, 2025 12:43

Dravida model. Will definitely have political involvement. Many years back have heardbthat any high value property coming for registration will be promptly notified to family belonging to particular party, who will in turn muscle their way to grab part of the amount


RAMAKRISHNAN NATESAN
ஏப் 17, 2025 10:39

குற்றவாளிகள் கம்பெனியின் ஆதரவாளர்கள்தான்.. கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் அல்லர்.. ஓனர் மன்னர் விளக்கம் .....


sankar
ஏப் 17, 2025 10:27

சிறப்பான விடியல் சார் - என்ன ஆனா என்ன, நம்ம ஷூட்டிங்கில், யு-ட்யூபில் சுயாட்சி பேசுவோம்


Padmasridharan
ஏப் 17, 2025 10:11

"பெயர், விபரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.. " Encounter ல சுட்டு தள்ளப்போறாங்களா இல்ல பணம் வாங்கிட்டு விடப்போறாங்களா


raghavan
ஏப் 17, 2025 09:26

முதல்வர் காதுக்கு இந்த செய்திகள் போய் சேர்வதில்லை. துணை முதல்வர் கண்ணிலியே படுவதில்லை. இப்படி இருப்பதால் அதிகாரிகளுக்கு கொண்டாட்டம்தான். அவர்கள் எடுப்பதுதான் நடவடிக்கை. ஆக மொத்தத்தில் நடப்பது மக்களாட்சியே இல்லை.


VENKATASUBRAMANIAN
ஏப் 17, 2025 08:13

விடியல் ஆட்சியில் எதுவும் நடக்கும். கடத்தல் போதை மருந்து ரியல் எஸ்டேட் ரவுடித்தனம் கொலை கற்பழிப்பு இதெல்லாம் சர்வசாதாரணமாக நடக்கிறது. முதல்வர் வீர வசனம் பேசி வருகிறார் மாநில உரிமை பற்றி. இங்கே மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி


நிக்கோல்தாம்சன்
ஏப் 17, 2025 07:50

கடைசி வரை கைது செய்யப்பட்டவர்கள் பெயர் வராமல் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் அரசின் செயல்பாடு என்று மக்கள் உணரும்போது அடுத்த 10 வருடங்கள் மீண்டும் அந்த கார்பொரேட் குடும்பம் தனித்தியங்க வேண்டியது தான்


Shankar C
ஏப் 17, 2025 07:44

உண்மைதான். தனிமனித குற்றங்களை தடுக்க முடியாது. ஆனால் அந்த குற்றங்கள் நடைபெறுவதற்கான சூழ்நிலை, வாய்ப்பு உருவாகுவதை காவல்துறை மற்றும் அரசாங்கம் தங்களிடம் உள்ள அதிகார சக்தியை கொண்டு தடுக்க முயற்சிக்கலாம்.


karupanasamy
ஏப் 17, 2025 07:44

இந்தமாதிரி வேலைகளில் ஹார்லிக்ஸ் குண்டன் அஞ்சா நெஞ்சத்துடன் செயல்படுவான்


மணியன்
ஏப் 17, 2025 07:37

மக்களே 26 ல் உங்கள் வாக்கை பயன்படுத்தி இந்த கொள்ளைகும்பலை விரட்டி அடித்து தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்.


Apposthalan samlin
ஏப் 17, 2025 12:57

அதற்கு திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும் வட மாநில குரூப்பை உள்ளே விட கூடாது நீங்கள் சொல்லுவது உண்மை பிஜேபி உள்ளே விட கூடாது இந்த மாதிரி வேலைகளை அவர்கள் தான் செய்வார்கள் வட மாநிலங்களுக்கு போலீஸ் போய் விட்டது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை