உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பா? வேளாங்கண்ணி மாதா சிலையை மாணவர்கள் சுமக்க வைத்த கல்வி நிறுவனம்: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு

ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பா? வேளாங்கண்ணி மாதா சிலையை மாணவர்கள் சுமக்க வைத்த கல்வி நிறுவனம்: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கல்வி காவிமயமாகி விடக்கூடாது என்று கருத்து தெரிவிக்கும் எதிர்பாளர்கள் வேளாங்கண்ணி மாதா சிலையை , பாட வேளையில் மாணவர்களை தூக்கி சுமக்க வைத்த அன்னை வேளாங்கண்ணி தொழில்நுட்பக் கல்லூரி மீது என்ன கருத்து சொல்லப்போகிறார்கள் என ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.கடந்த 4ம் தேதி அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அந்த சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்ததுடன், தவறான சுற்றறிக்கையை அனுப்பிய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியது. இதனைத் தொடர்ந்து, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, தன்னம்பிக்கை அளிக்கும் நோக்கத்தில் ' பள்ளி மேலாண்மை குழு' சொற்பொழிவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. 'பரம்பொருள் அறக்கட்டளை' என்ற அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் உரை நிகழ்த்தினார். இந்த விவகாரம் வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு பள்ளியில் ஆன்மிகம் சார்ந்து பேசுவதா என்றும் ஆசிரியர்கள், ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் சூடாக கருத்து தெரிவித்தனர். பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் ஆவேசமாக கருத்து வெளியிட்டார். இவ்விவகாரம் விவாதப் பொருளானது. இதனையடுத்து கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகள் எதையும் பள்ளிகளில் நடத்தக் கூடாது என, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அங்குசெட்டிபாளையம் என்ற கிராமத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று( செப்.,06), நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வேளாங்கண்ணி மாதாவை, படிக்க வந்த மாணவர்களை வைத்து தூக்கிக் கொண்டு கல்லூரி முழுக்க சுற்றி வந்தனர். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அன்னை வேளாங்கண்ணி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று தொழில்நுட்பக் கல்லூரிக்கு படிக்க வந்த ஹிந்து மாணவர்கள் அங்கே பணிபுரியும் ஆசிரியர்கள்,கல்லூரி நேரத்திலே வேளாங்கண்ணி மாதாவை தூக்கிக்கொண்டு கல்லூரி முழுக்க சுற்றி வருவது எந்த விதத்திலே நியாயம்? பள்ளிக்கூடங்களில் மதம் சார்ந்த எந்த கருத்துக்களும் பேசக்கூடாது என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறுகிறார். விநாயகர் சதுர்த்தி விழா பள்ளிகளில் கொண்டாடக்கூடாது. ஆனால் அன்னை வேளாங்கண்ணியை தூக்கி சுமப்பது நியாயமா? இது மறைமுகமான மதமாற்றத்திற்கு தூண்டுதல் தானே. இந்த நிர்வாகத்தின் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.கல்வி காவிமயமாகி விடக்கூடாது என்று கருத்து தெரிவிக்கும் எதிர்பாளர்கள் வேளாங்கண்ணி தெய்வத்தை தூக்கி சுமக்கும் இந்த தொழில்நுட்பக் கல்லூரி மீது என்ன கருத்து சொல்லப் போகிறார்கள். எத்தனை ஊடகம் விவாதிக்கும் என்பதை பார்ப்போம். இதற்கு யாரும் பொங்க மாட்டார்களா? இது மதவாதம் இல்லையா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 08, 2024 12:12

முக்கியமாக அனைவரும் கவனிக்க வேண்டியது கல்வி காவி மயமாகத்தான் மாறக்கூடாது என்று கூறுகிறார்கள். கிறிஸ்துவ மயமாகவோ அல்லது இஸ்லாமிய மயமாகவோ மாறக்கூடாது என்று சொல்லவில்லை. மதச்சார்பின்மை என்றால் இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது என்று அனைத்து திராவிட கட்சிகள் திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் என எல்லா கட்சிகளின் கொள்கை.


Siva Balan
செப் 08, 2024 03:58

திமுக வினர் மதம் கிறிஸ்துதானே.


Nachiar
செப் 08, 2024 03:47

mālai mathiyoḍu nīraravampuṉai vārchaṭaiyāṉ vēlanakaṇṇiyoḍum virumpummiḍam…” — Srī Jñāna சம்பந்தர் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகேயர் இந்திய துணை கண்டத்தை வந்தடைந்து ஆக்கிரமிக்கின்றனர். நில ஆக்கிரமிப்பு மற்றும் சமயம் பரப்பும் நோக்குடன் வந்து இரண்டிலுமே குறிப்பிடத்தக்களவு வெற்றியும் கொள்கின்றனர். மதம் மாற்றும் முயற்சியில் ஒரு ஆயுதமாக இந்து பழக்க வழக்கங்களை தாமும் பின்பற்றுகின்றனர். அதில் ஓன்றுதான் சர்ச்சில் மணி அடிப்பது சாம்பிராணி போடுவது ரோசரி உத்திராட்ச மாலை போல் மாலை பாவிப்பது குருத்தோலை சாம்பல் நம் விபூதி எல்லாம். இன்று இதை விட தேர் ஓட்டம் கோடி மரம் மேளம் நாதஸ்வரம் பொங்கல் திலகம் இட்டுக்கொள்வது இதையும் விட கோரமாக இந்து பெயர்களை வைத்துக் கொள்வது என்று போய்க்கொண்டிருக்கிறது. பிரேசில் மற்றும் இதர தென் மத்திய அமெரிக்கா மிக்க நாகரிகமான சுதேச சமய கலாச்சாரமே போர்த்துக்கீச ஜெசுவிட் மத மாற்றிகளினால் அழிக்கப் பட்டுவிட்டது. இந்தியாவில் இருந்து சென்ற ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளிகளினால் கூலி என்றழைக்கப்பட்ட அங்கும் இந்து கலாச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. அவர்களையும் மதமாற்ற கொடுமைகள் விடவில்லை. இந்த அடிப்படியில் தான் வேளாங்கண்ணி அங்கும் அறிமுகப் படுத்தப் பட்டது. இந்து அல்லாதவர்கள் தேரோட்டம் மற்றும் இதர இந்து வழக்கங்களை காபி அடிப்பது cultural appropriation தான். ஜெயஸ்ரீ சரநாதன் என்பவர் தேவி வேலன்னக்கண்ணி கோவிலின் சரித்திரத்தை ஆதார பூர்வமாக கட்டுரைகள் எழுதி உள்ளார். ஜெய் சிவா ஸ்ரீராம்


Bharathi
செப் 08, 2024 01:40

திருட்டு திராவிட கட்சிக்கு ஓட்டு போடும் ஹிந்துக்கள் சொரணை கெட்டவர்கள்.


Ramesh
செப் 08, 2024 01:40

யாரு நாம, போங்க சார் காமெடி பண்ணிட்டு. இலவசத்தையும், கொடுக்கும் பணத்தின் அளவையும் சற்று அதிகரித்தால் போதும் படித்த பாமர மக்களே விழுந்து விழுந்து ஒட்டு போட்டு ஜெயிக்க வைப்பார்கள் நம் மக்களின் அறிவு அவ்வளவு தான்.


Ravi Kumar Damodaran
செப் 08, 2024 00:42

281 out of state fund.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 08, 2024 00:30

எப்படி வங்கத்தேசத்து மியாக்கள் ஊடுருவுகிறார்கள் ?? - கல்கத்தா - இந்தியாவின் பெரிய முஸ்லிம் சிறுபான்மையினரின் உறுப்பினர்கள், வீடு மற்றும் வேலைகளில் இருந்து தங்களைத் தடுக்கும் பரவலான தப்பெண்ணத்தைத் தவிர்க்கும் முயற்சியில் பெரும்பாலும் இந்து பெயர்கள் மற்றும் ஆடை பாணிகளை ஏற்றுக்கொள்கிறார்கள். கல்கத்தாவின் மத்திய அலுவலக மாவட்டத்தில் உணவுக் கடையை நடத்தி வரும் ஷேக் சலீம் என்ற முஸ்லீம், ஷங்கர் மைதி என்ற பொதுவான இந்துப் பெயரைப் பயன்படுத்தி தனது கடையை "சங்கரின் துரித உணவு" என்று அழைக்கிறார். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற ஊருக்கு வந்த ஷோகத் அலி என்ற முஸ்லீம் மாணவர், சைகத் தாஸ் என்ற பெயரைப் பயன்படுத்தி இந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரபலமான இந்து தெய்வமான காளியின் பெரிய படத்தை தனது அறையில் சுவரில் தொங்கவிடுகிறார். ஜஹானாரா பேகம் தினமும் காலையில் அரபு மொழியில் அல்லா என்று பொறிக்கப்பட்ட வெள்ளி தாயத்தை எடுத்து, அதற்குப் பதிலாக நெற்றியில் வெண்பூசணி பொடியையும், திருமணமான இந்துப் பெண்ணின் சிவப்பு மற்றும் வெள்ளை சங்கு வளையல்களையும் மீன் மார்க்கெட்டில் வேலைக்குச் செல்வதற்கு முன், அங்கு அவர் பார்வதி என்று அழைக்கப்படுகிறார் - இது ஒரு இந்து தெய்வத்தின் பெயர். இந்த மூவரைப் போலவே கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "அன்றாட வாழ்வில், வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் உள்ள முஸ்லிம்கள் சக்திவாய்ந்த இந்துக்களால் வகுப்புவாத பாகுபாடுகளை எதிர் கொள்கின்றனர், மேலும் அவர்களது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் நியாயமற்ற முறையில் மறுக்கப்படுகின்றன" என்று மூத்த சமூக ஆய்வாளரும் பிரதிடின் நிர்வாக ஆசிரியருமான அஞ்சன் பாசு கூறினார். , கல்கத்தாவில் ஒரு பெங்காலி நாளிதழ். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு, பல இந்துக்கள் பாகிஸ்தான் முஸ்லிம்களுக் காக உருவாக்கப்பட்டது என்றும் அங்குதான் அவர்கள் சொந்தம் என்றும் நம்புகிறார்கள் என்று இந்து மதத்தைச் சேர்ந்த திரு பாசு கூறினார். 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை இந்துக்கள் வேலை செய்யும் அரசு மற்றும் பல தனியார் துறை அலுவலகங்களில் கூட முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு, வகுப்புவாத பாகுபாடு "நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார். இந்து அடையாளங்களை ஏற்றுக்கொண்ட பல முஸ்லீம்கள் தங்கள் செயல்களால் சங்கடமாக உணரவில்லை என்று கூறுகிறார்கள். "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலை தேடி கல்கத்தா வந்தபோது, ​​நகரத்தில் உள்ள அனைத்து தெரு உணவகங்களும் நான் ஒரு முஸ்லீம் என்பதால் என்னை வேலைக்கு அமர்த்த மறுத்தன," திரு. சலீம் கூறினார். “ஒரு முஸ்லீம் அங்கு வேலை செய்தால் அவர்களது இந்து வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகளில் சாப்பிட மறுக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். “ஆனால் விரைவில் இந்து அடையாளத்தின் கீழ் இந்துக்களுக்குச் சொந்தமான உணவகத்தில் சமையல்காரராகப் பணிபுரிந்த ஒரு முஸ்லீம் மனிதரை நான் சந்தித்தேன். நான் அவருடைய அறிவுரையைப் பின்பற்றி, ஒரு இந்து அடையாளத்தைத் தேர்ந்தெடு த்தேன், விரைவில் ஒரு மேல்தட்டு இந்து என்னை உணவுக் கடை நடத்துவதற்கு வேலைக்கு அமர்த்தினேன். திரு. சலீமின் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்துக்கள், மேலும் அவர் ஒரு முஸ்லீம் என்று அவரது வாடிக்கையாளர்களுக்குத் தெரிந்தால், அவரது வணிகம் பேரழிவை சந்திக்கும் என்று அவர் அஞ்சுகிறார். “[பல இந்துக்கள்] முஸ்லிம்களை அவர்களின் மதத்தின் காரணமாக வெறுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, எனது மத அடையாளத்தை பொய்யாக்கி நான் எந்த தவறும் செய்யவில்லை, என்றார். திரு. அலி, 24 வயதான பல்கலைக்கழக மாணவர், தனது நம்பிக்கையை மறைக்க அவர் எடுத்த முடிவால் கவலைப்பட்டார், ஆனால் 29 விருந்தினர் மாளிகை உரிமையாளர்கள் தனது மதத்தின் காரணமாக அவருக்கு அறையை வாடகைக்கு விட மறுத்ததால் தனக்கு வேறு வழியில்லை என்று கூறுகிறார். அவர் தனது நிதிநிலை மேம்பட்டவுடன் பாசாங்கு செய்வதை கைவிட விரும்புகிறார். "நான் ஒரு முஸ்லீம் என்று மக்களிடம் சொல்ல முடியாது என்பது எனக்கு வேதனை அளிக்கிறது," என்று அவர் கூறினார். "இந்த மதப் போர்வையிலிருந்து நான் வெளியேறும் நாளுக்காக நான் அமைதியின்றி காத்திருக்கிறேன்." சில ஆய்வாளர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஆழமான பாகுபாடு இறுதியில் அவர்களை வன்முறையில் தள்ளக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள். "வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவில் தங்களின் பங்கு நியாயமற்ற முறையில் மறுக்கப்படுவதாக இந்திய முஸ்லீம்கள் வலுவாக உணருவதால், அவர்களின் குறைகள் அரசு மற்றும் சமூகத்தின் மீது கடுமையான கோபத்தை உண்டாக்கி, பலரை ஒரு நாள் பயங்கரவாதத்தை நாடத் தள்ளும்" என்று திரு. பாசு கூறினார். ஆனால் தற்போதைக்கு, பணியிடத்தின் உண்மைகள் பல முஸ்லிம்கள் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டே இருப்பார்கள். மேற்கு வங்க மாநிலத்தில், 27 சதவீத இஸ்லாமிய சமூகத்தினர் வசிக்கும் நிலையில், அரசுத் துறையில் முஸ்லிம்களின் வேலைவாய்ப்பு 3 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என, சமீபத்தில் மத்திய அரசின் முன்னாள் நீதிபதி ராஜேந்திர சச்சார் ஆய்வு மேற்கொண்டார். முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு “நாட்டின் அரசியல் மற்றும் மக்களிடையே உள்ளது. மோசமானது, அவர்களில் பலர் பயங்கரவாதத்தின் போலி குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர், ”என்று இந்து மதத்தைச் சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல் கூறினார்.


சண்முகம்
செப் 07, 2024 23:58

கிபி 1,650 முதல் தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் தலைநகரமான லிமாவில் கன்னி மேரியை தேரில் வைத்து ஊர்வலம் செல்வது (வேளாங்கண்ணியிலும் உண்டு) ஆண்டு தோறும் விழாவாக நடக்கிறது.


R.MURALIKRISHNAN
செப் 07, 2024 22:33

மகேஷ்ற்கு பொய்யே மொழி


R.MURALIKRISHNAN
செப் 07, 2024 22:31

சிறுபான்மை கண்டால் சர்வாதிகாரியும் தொடை நடுங்குவான்.