உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நாளை அமைச்சரவை கூட்டம்

 நாளை அமைச்சரவை கூட்டம்

சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையில், நாளை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்., - வி.சி.க., இடதுசாரி ஆதரவுடன், முதல்வராக, கடந்த மாதம் 10ல் விஜய் பதவியேற்றார். முதல்வர் விஜயுடன் சேர்த்து, அமைச்சரவையில் மொத்தம், 35 பேர் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை ௧௧:00 மணிக்கு நடக்கிறது. இதில், இடைக்கால பட்ஜெட் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை