உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி

கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி

சென்னை : தமிழக அரசு பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும், மாணவ, மாணவியருக்கான, பொதுத்தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் நேற்று வெளியிட்டார். அப்போது, 'முதல் முறையாக, பிளஸ் 2 கணக்கு பதிவியல் தேர்வில், கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளது' என்று, தெரிவித்தார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், பொதுத்தேர்வு அட்டவணையை நேற்று வெளியிட்டார். அடுத்த ஆண்டு மார்ச் 2 முதல், 26ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகளும்; மார்ச் 11 முதல் ஏப்., 6ம் தேதி வரை, 10ம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற உள்ளன. மொத்தம் 7,513 பள்ளிகளை சேர்ந்த 8.07 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வையும், 12,485 பள்ளிகளை சேர்ந்த 8.70 லட்சம் மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வையும் எழுத உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் கமிஷனுடன் ஆலோசித்து, இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வழக்கத்திற்கு மாறாக, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும் போதே, 10ம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற உள்ளன. பிளஸ் 1 அரியர் தேர்வுகள், மார்ச் 3 முதல், 17 ம் தேதி வரை நடக்கும். மே 8ல் பிளஸ் 2; மே 20ல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வு முடிவுகள் வெளியாகும். பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்ட பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: மாநில கல்விக் கொள்கையின்படி, இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு கிடையாது. கடந்த முறை தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும். பொதுத்தேர்வை நினைத்து மாணவர்கள் பதற்றம் அடையாமல், உற்சாகத்தோடு பங்கேற்க வேண்டும். இந்த ஆண்டு முதல் முறையாக, பிளஸ் 2 கணக்கு பதிவியல் தேர்வு எழுதுவோர், சாதாரண கால்குலேட்டர் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாதிரி பள்ளிகள் செயலர் சுதன், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சசிகலா ஆகியோர் உடனிருந்தனர். பிளஸ் 2 தேர்வு அட்டவணை தேதி பாடம் மார்ச் 2 தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 5 ஆங்கிலம் மார்ச் 9 வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் மார்ச் 13 இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள் மார்ச் 17 கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் பொது மார்ச் 23 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகவியல், கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணுவியல் பொறியியல், அடிப்படை குடிமை பொறியியல், அடிப்படை ஆட்டோ மொபைல் பொறியியல், அடிப்படை இயந்திர பொறியியல், ஆட்டோமொபைல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகவியல் மார்ச் 26 ஆங்கில தொடர்பியல் நெறிமுறைகள், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் தொழில் முறை, அடிப்படை மின் பொறியியல் பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை நாள பாடம் மார்ச் 11 தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 16 ஆங்கிலம் மார்ச் 25 கணிதம் மார்ச் 30 அறிவியல் ஏப்.,2 சமூக அறிவியல் ஏப்., 6 விருப்ப மொழி பாடம் ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Prasanna Krishnan R
நவ 05, 2025 10:31

For engineering only scientific calculator to be used. For school level, Clarks tables or log book to be used. If some muff and idiot becomes minister, this is the result.


NellaiBaskar
நவ 05, 2025 09:46

படிப்பறிவை மறக்கடிக்கவே இப்படி ஏற்பாடு. படித்தால் ஞானம் வரும் வந்தால் அவர்கள் படித்தவர்கள் பக்கம் போய் விடுவார்கள். பின்னர் கேள்வி கேட்பார்கள்.


N S
நவ 05, 2025 09:37

தன்னிகரில்லா திராவிட மாடல் தமிழக முதல்வர் அப்பாவின் விருப்பப்படி கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. மற்ற எல்லா தேர்வுகளுக்கும் விரைவில் "துண்டு சீட்டு" உபயோகம் பண்ண அறிவிப்பு எதிர்பார்க்கவும். "அரசன் எவ்வழி மாணவர்கள் அவ்வழி". மாநிலம் உருப்பட்ட மாதிரிதான்.


S.V.Srinivasan
நவ 05, 2025 08:00

அப்புறம் எப்படி மாணவர்கள் சுயமா மூளையை உபயோகித்து படிச்சு முன்னேறுவது. பேசாம மாணவர்கள் வீட்லேர்ந்து தேர்வு எழுதி பேப்பரை பள்ளியில் கொண்டு வந்து கொடுக்க சொல்லி ஒரு சட்டம் போட்டுடுப்பா மகேசு.


chennai sivakumar
நவ 05, 2025 07:59

ஏற்கனவே எட்டாம் வாய்ப்பாடு கூட ஒழுங்காக தெரியவில்லை. இதில் கால்குலேட்டர் உபயோகிக்க அனுமதித்தால் விளங்கும்


xyzabc
நவ 05, 2025 06:54

கல்வியில் முதல் மாநிலம் என தம்பட்டம் அடித்ததற்கு இதுவே காரணமா ?


சமீபத்திய செய்தி