நர்சிங் தெரபி, மருந்தாளுனர் படிப்புகளில் சேர அழைப்பு
சென்னை:அரசு மருத்துவ பட்டயப் படிப்பு பள்ளிகளில் உள்ள நர்சிங் தெரபி, மருந்தாளுனர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.சென்னை, பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ பட்டயப் படிப்பு பள்ளிகளில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கு, 200 இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் மாணவர் சேர்க்கைக்கு, https://tnhealth.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கிஉள்ளது.இதுவரை, 200 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருப்பதால், டிச., 2ம் தேதி மாலை 5:00 மணி வரை, தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் கிருஷ்ணவேணி கூறியதாவது:கொரோனா பாதிப்புக்கு பின், இந்திய மருத்துவ முறை வளர்ச்சி அடைந்துள்ளது. மருத்துவ தேவைக்கு ஏற்ப, நர்சிங் தெரபி, மருந்தாளுனர்கள் தேவையும் அதிகரித்துள்ளன. இப்படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரித்து இருப்பதால், பிளஸ் 2 படித்த மாணவர்கள் விண்ணப்பிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.