உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, நீலகிரி பிரசாரம் ரத்து: தவெக தலைவர் விஜய்

கோவை, நீலகிரி பிரசாரம் ரத்து: தவெக தலைவர் விஜய்

கரூர் சம்பவத்தை தொடர்ந்து, தன் இரண்டு நாள் பிரசாரத்தை விஜய் திடீரென ரத்து செய்துள்ளார். த.வெ.க., தலைவர் விஜய், சென்னையில் உள்ள வீட்டில் இருந்தபடி, கட்சியின் இரண்டு முக்கிய நிர்வாகிகளுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று மதியம் ஆலோசனை நடத்தினார். வழக்குகளை எதிர்கொள்வது குறித்து, மூத்த வழக்கறிஞர்கள் சிலருடன் அவர் மொபைல் போனில் ஆலோசனை நடத்தினார். உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் இருவர் ஆஜராக உள்ளனர். அவர்கள் ஆலோசனையின்படி, தன் தேர்தல் பிரசாரத்தை விஜய் மாற்றி அமைக்க உள்ளார். வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கவிருந்த கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு பிரசாரத்தை, அவர் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை