உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியலாமா? முதல்வர் கேள்வி

கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியலாமா? முதல்வர் கேள்வி

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பிரதமர் மீன்வளத் திட்டம், ஜல் ஜீவன் என, பிரதமரின் பெயரையும், 'ஸ்டிக்கரில்' பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு எல்லாம், அவர்களை காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான். படையப்பா பட 'காமெடி' போல, 'மாப்பிள்ளை அவர்தான்; ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என, சேலம் அரசு விழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேச வேண்டிய நிலைக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூற வேண்டும். இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை, மத்திய பா.ஜ., அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !